பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

வையக வாழ்வின் காவலனுக்காக, அறிவாற்றல்களைத் துளைத் தெடுக்கவல்ல அம்புகளை எய்வதற்கு ஏற்ற வகையில் வில்லை வளைக்கிறேன். கொடுமைகளுக் கெதிராகப் போர் தொடுக்கும் வகையில் அவர்கள் நெஞ்சத்தில் சீற்றக் கனலை மூட்டுகிறேன் எனது நிலையான விதிகளை எவரும் மீறாதபடி விண்ணையும், மண்ணையும் ஊடுருவுகின்ற்ேன்.

(இருக் 10)

நானிலங்களிலும் நிறைந்திருக்கும் காற்றைப்போல் நான் உயிர்க்கிறேன். பரந்த இம் மாநிலம், வானக எல்லைகளையும் கடந்து செல்கிறேன் நான். என்னை எவரும் வெல்ல முடியாது, எவரும் என் கட்டள்ைகளை மீற முடியாது.

(இருக் 10)

செல்வங்கள் யாவற்றிற்கும் உரிமையுடைவன் நானே எனக்கு ஈடானவர் எவரும் கிடையாது. மேலான அறிவே என் உள்ளுயிர் எந்த மனிதனின் நண்பனும் எனக்கு உகந்தவனே என் நெஞ்சத்தில் துயரத்திற்கு இடமில்லை. கடலளவு பரந்தது என் நெஞ்சம். என் அன்புக்குரியவர்கள் யாவருக்கும்

அதில் இடமுண்டு. (அதர் 16)

நற்றமிழில் நால் வேதம்