பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரியர்கள் சப்த சிந்துப் பகுதியில் கி.மு. 1500-க்குப் பின் சிறுகச் சிறுகக் கூட்டங் கூட்டமாய்ப் பல நூறு ஆண்டுகாலமாய்ப் புகுந்து கங்கைச் சமவெளியை நிரப்பி அங்கிருந்த பழந்தமிழர்களோடு ஒட்டி உறவாடி கலந்தும் கலவாமலும் வாழ்ந்தனர். மொகஞ்சதாரோ அரப்பா அழிவுக்குப் பின் ஆரியர் வாழ்வு செழிப்புற்றது. அதுவே வேத காலமாகும்.

அன்று சிந்து (தமிழர்) நாகரிகத்தின் முடிவும் ஆரியர்களின் வருகையும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தன. ஆரியர்கள் எவரும் ஆட்சி புரிந்ததில்லை. ஆடு மாடு குதிரை களைக் கொண்டு நிலத்தை நம்பி வாழ்ந்தவர்களே. ஆதி காலத்தில் அவர்களுக்கு என்று எழுத்து மொழி எழவில்லை. பேச்சுமொழியே நிலவியது.

மாந்தனின் படைப்புகளில் மொழி ஒன்றுதான் அனைத்திலும் மேலானது. ஒரு மூதால மரத்தின் பல கிளைகளாய், விழுதுகளாய் நாற்றிசையிலும் ஒலிகளாய் எழுத்து வடிவங்களாய்க் காலந்தோறும் உள்ளது சிறத்தலாய், அகம்புறம் ஆகிய பண்பாட்டின் - நாகரிகத்தின் எண்ணத்தின் கோட்டோவியங்கள்தாம் மொழிகள். எழுதாக் கிளவியான ஒலிச்செல்வம் வாழ்வின் ஒளிச் செல்வமாக வாய் மொழியாய்தாய் மொழியாய்த், தாய்வழி சமூகச் காலத்திலேயே தோன்றி விட்டது என்பது உறுதி.

வடக்கே புகுந்த ஆரியர்கள் தெற்கேயும் கி.மு.விலேயே புகுந்து கலந்தனர். அதனாலேயே

"நால் வேதம் நெறி தவறினும்" எனப் புறமும் - "வேத முதல்வன் என்ப"