பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

புடவிப் பேராற்றலின் தலைவன் அவன், நெசவின் ஊடு பாவு இரண்டையும் நன்கறிந்தவன், எந்தப் பொருண்மைகளை நமக்குச் சொல்ல வேண்டுமோ, தக்க நேரத்தில் அவன். அவற்றைச் சொல்வான். - அழிவில்லாமல் நிலைத்திருப்பவையும் அழிபவையையும் படைத்த மூதாதையும் அவனே. எல்லா அளவுகளையும் திசைகளையும் கண்ணால் அளந்தவாறு இங்குமங்குமாக, மேலும் கீழுமாக கட்டின்றி இயங்குகிறான். (இருக் 6)

வையகத்தை உருவாக்குபவன் அவனே பன்முகம் கொண்ட அறிவின் உறைவிடம் அவன், ஒளிமிகுந்த உயிர்கள்.அனைத்திலும் பரவி உள்ளான் அவன். உலகைப் படைப்பவனாயிருந்து யாவற்றிற்கும் ஆதரவாயிருந்து தாங்கி நிற்கிறான். அவன் கண்ணில் படாதவை எவையும் இல்லை. அவன் எல்லாப் பெருமைக்கும் அப்பாற்பட்டவன். ஈடு இணையற்ற ஒருவன் என்று அறியப்படுகிறான். இன்றியமையாத ஏழு வளிகளடங்கிய உயிர்நிலை அவனிடம் அடங்கியிருந்து பேரின்பம் பெறுகிறது, இன்பமளிக்கும் அத்தனைப் பொருள்களையும் உயிர்மைகளுக்கு அவன் தந்தருள்கிறான். மூவுலகங்களுக்கும் முதல்வனாகிய அவன் வழிபாட்டுக்கு ஏற்றவன். (யசுர் 17) 世

த.கோ - தி.ழி .