பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

தூய்மையிலும் தூய்மையானவன் அவன். - நன் மக்களின் நெஞ்சங்களில் வாழ்பவன். கோவில் ஒதுவர்களைப்போல நல்ல சொற்களை J. மொழிந்து அவற்றைப் பரவச்செய்யும் ஊக்கி விப்பவன் அவன். - வீட்டிற்கு வருகை தந்திருக்கும் விருந்தாளியைப்போல், அன்பு வேண்டியவன் அவன். நின்று நிலைத்திருக்கும் அறமுறைகள் யாவும் அவன் ஆக்கியவையே.

உலக இயக்கும் ஆற்றல்களாகிய கடல்கள், மண். மலைகள் ஆகியவற்றின் ஊடே அவன் தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறான். (இருக் 4)

ஒவ்வோர் உருவிலும் அவன் தன்னை உணர்த்துகிறான், இயற்கைச் செல்வத்திலும், படைப்பின் ஒவ்வோர் அங்கத்திலும் அவனது பங்களிப்புப் பளிச்சிடுகிறது: அவனது ஆற்றல் ஒன்றே படைப்பினங்கள் யாவற்றிற்கும் எழுச்சியூட்டுகின்றது. (இருக் 6)

த.க்ோ - தி.பூரீ *ళ్లు