பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

மக்கள் மேல் ஆட்சி புரிகிறவன் அவன் ஒருவனே, உலக முழுவதும் அவனுடைய பேரரசு நமது உணர்வுள்ள ஐம்புலன்களையும் அடக்கி வழி காட்டுபவன் அவனே. (அதர் 20)

அவனே பேருலகின் கோவேந்தன் அடிப்பிடிப்பில்லாத வேர்ப் பகுதியில் பேருலகத்தைத் தாங்கி நிற்பவன் அவனே. அதன் கிளைகள் கீழ் நோக்கிச் செல்கின்றன, வேர்கள். மேலெழுந்து நிற்கின்றன. . )غناه i(

அவனை எவரும் புறக்கணிக்க முடியாது. எவரும் அவனை வெறுப்பேற்றத் துணிவதில்லை. அவன் புகழை இடையூறுகள் தடுத்து நிறுத்த முடியாது. மாந்தர்களைக் கொடுமைப் படுத்துபவர்கள் கூட. அவ்வாறு செய்ய முடியாது. தீங்கு செய்வதிலேயே ஈடுபட்டிருப்போர் நிலையும் அதுவே. - (இருக் 1)

மாந்தன்மை கொண்ட நல்லோர்களை அவன் காப்பாற்றுகிறான். - உயிர்நலம் சார்ந்த அமுத தாரைகள் பாய்ந்தோடி வர வழி செய்கிறான். - - (அன்பு, உண்மை, அறஆர்வம், எளிமை, நிறைவு, பெருந்தன்மை அழிவு) (இருக் 1)

நன்னடத்தை உடையோர், அறிவாளிகள் விதி முறைகளை இயற்றும் இறைவன்

த.கோ - தி.நீ