பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

১**ঈ

படைப்பாற்றலில் புனைவு

இயற்கை எழில் இறைவன் அருளும் அற்புதங்களில் ஒன்று. அழகிய பொருள் ஒவ்வொன்றிலும் கடவுளின் கைவண்ணத்தை உணர்வோம். அவனின் கைபட்ட உடனேயே ஆறுகள் சிலிர்த்தெழுந்து சுழித்துச் செல்கின்றன. அவன் புன் முறுவலிக்கும் போதே செங்கதிர் ஒளிர்கிறது, வெண்ணிலா ஒளிவிடுகிறது, விண்மீன்கள் மின்னுகின்றன, பூக்கள் மலர்கின்றன. எழு ஞாயிற்றின் முதல் கதிர்கள் பட்டதுமே, உலகம் விழித்தெழுகிறது. வீசும் ஒளிவெள்ளம் செம்மலரின் முறுவலிக்கும் மெட்டுகளின் மேல் சிதறி விழுகிறது, பாடும் பறல்களின் இன்னிசை நறுமணம் வீசும் காற்றோடு கலக்கிறது. புலர்காலைப் பொலிவு கடவுளின் புனைவுத் திறனின் வெளிப்பாடு. (இருக் 1)

த.கோ - தி.பூரீ *}{ుశః