பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒரு காலத்தலை அல்ல. இருக்கு வேதப் பாடல்கள் பல நூற்றாண்டு கால வாய் மொழித் திரட்டாகும்.

சாம வேதமும் எசுர் வேதமும் கடவுட்கான வேள்வி முறைகளை முன்னிலை-படர்க்கைப் பரவலாகவும் செயற் பாடுகளையும் இணைத்துத் தொகுக்கப்பட்டவையாகும். இருக்கு வேதப் பாடல்கள் சிற்சில மாற்றங்களுடன் கூடி 1549 பாசுரங்கள் அடங்கியுள்ளன. புரோகிதர்கள் கையாள்வன இவை. பண்ணோடு பாடப்படுவன சாமவேதப் பாக்கள்.

அதர்வனவேதம் சுமார் 6000 மந்திரங்களும் 731 சூக்தங்களும் பெற்றுள்ளது. 20 காண்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது; இதிலும் இருக்குவேதப் பாடல்கள் பிணைக்கப் பட்டுள்ளன. அவை பெரிதும் வழிபாட்டுப் பாடல்கள். மந்திர தந்திரங்கள் இவை வேதகாலத்தின் இறுதியில் தோன்றியவை.

இந்த நான்கு வேதங்களும் உலகப் புகழ் பெற்றவை. காரணம் வேத கால ஆரியர்களின் பழக்க வழக்கங்கள் - வாழ்க்கை முறைகள், அவற்றுடு -பண்பாடு நாகரிகம் என அக் கால ஓரின மாந்தர்களின் வரலாறுகள் வெளிப்படுகின்றன. மற்றும் வரலாற்றுக்கு முற்பட்ட நாகரிகத்தில் பிற நாடுகளோடும் ஒப்பிடுகையில் எழுதாக் கிளவியாய் வழங்கிய இலக்கியங்கள் இவ்வளவு வேறு எங்கும் கிடைக்கவில்லை. ஆரியர்களின் காடுறை வாழ்வில் மின்னல் கீற்றொளியைப் போல வாழ்வின் எண்ண ஊற்றுகள் பலவும் இரண்டாயிரம் ஆண்டு கட்கு முன்னர் வெளிப்பட்ட பேருண்மைகள் சிலவும் இன்றும் வியப்பளிக்கும் வண்ணம் சுவை பயக்கின்றன.