பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"डू

ஒய்வற்ற அன்னம்

உண்மையை இடைவிடாமல் தேடுதலே வாழ்க்கை. மானிட உயிராகிய அன்னம் உண்மையைத் தேடித் தன்னுடைய முடிவற்ற பயணத்தைத் தொடங்குகிறது. இறக்கைகளை நன்கு பரப்பி உயர உயரச் சென்று அளந்தறிய முடியாத விண்ணை எட்டுவதற்காக ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப் பறந்து கொண்டேயிருக்கிறது. ஓய்வற்ற அன்னத்தின் நீண்ட நெடிய பயணம் அது, ஆற்றலுள்ள இறைவனின்அருளாட்சி அதற்குண்டு. அன்னத்தின் கூரிய பார்வை நிலத்தின்மேல் நன்கு விழத்தான் செய்கிறது. - ஆயினும் அதற்கு ஒய்வொழிவு கிடையாது, அமைதியுந்தான். மேலே மேலே பறந்து கொண்டுதானிருக்கிறது. ஓய்வில்லாத அன்னப்பறவை முடிவு காண முடியாத பயணத்தைத் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது. (இருக் 10)

த.கோ - தி.பூரீ