பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ጙ

நற்றமிழில் நால் வேதம் سسة

}

o

64

பேரிறையே, வஞ்சமின்றி உண்மை நாடுபவருக்கு, வேண்டுவன பெறுவதில் பெருமகிழ்ச்சி. ஆசையற்ற உள்ளம், -

களங்கமற்ற நல்மனம், கூர்மையான அறிவு இவற்றை அருள்வாய். (சாம 306)

எங்கெங்கிருந்தோ உன்னைத் தொழுது வேண்டுகிறோம், எங்களைக் காத்தருள அழைத்தோம், - தேய்வு, மாய்வு இவற்றிலிருந்து விடுவிக்குமாறு இரஞ்சுகிறோம். எங்கள் வேண்டுகோள்களுக்கு நீ செவி சாய்த்தாய். நாலாவிடங்களிலிருந்தும் நின் பேரின்ப வாழ்த்துகள் எங்கள் மேல் பொழிந்தன. (அதர் 19)

அண்டப் பெருவெளியின் ஒளியே, ஆற்றலே, உன்னை நீயே அண்டங்களின் ஆணைகளுக்கு ஆட்படுத்திக் கொள்கிறாய். (யசுர் 4)

எல்லையற்ற காலம் நிலைத்திருப்பது வானகம், காற்று. எல்லையற்ற காலம் நிலைத்திருப்பவை தாய், தந்தை, மகன், வாழ்பவை எல்லாம் எல்லையற்ற காலம் நிலைத்திருப்பது சமூக உணர்வு. இதுவரை தோன்றியவை, இனி தோன்றப் போகின்றவை எல்லாமே எல்லையற்ற காலம் நிலைத்திருப்பவையே.

(இருக் 1)