பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாந்த இனத்தின் அறமுறை, ஒழுங்கு அழகு, பழக்க வழக்கங்கள் முழுதும் தொழில்செய்து (உழைத்து) கரடு, முரடாகிப் போன பாட்டாளிகளின் முகங்களைப் போல வந்தேறிகளான ஆரியரின் வாழ்வுப் பரப்பு எல்லை முழுதும் வேதங்களில் தெளிவாகப் புலப்படுகின்றன. ஒளிமிக்க நுண்ணறிவும், இயற்கையின் அரிய உயரிய நுட்பங்களையும், வாழ்வின் தெளிவுகளையும் காட்டுகையிலேயே இருண்ட எண்ணங்களும் மண்டிக் கிடக்கின்றன. நான்கு வேதங்களின் ஊடே, உழைப்புத்தான் மாந்தனைப் பற்றிய கருத்தமைப்பைக் காட்டுவதற்கு ஓர் இன்றியமையாத அடையாளம் எனினும், உழைப்பின்மை, ஏமாற்று இவை கூடும்போது மந்திர-தந்திரபொய்மையின் ஒட்டுணித்தன்மை, மலிவான கலை நுணுக்கத் தன்மை மானுடத்தை அழிக்கும் எண்ணங்களையும் வெளிப் படுத்துகின்றன; இவை வேத காலத்தின் பின்னிறக்கம்.

அலைகளுக்கு பின்னே பேராழியில் ஆணி முத்துகள் கிடைப்பதுபோல் நான்கு வேதங்களை - ஆங்கிலத்தில் படிக்கும் போதும் சரி,தமிழில் சம்புநாதன் மொழி பெயர்ப் புகளைப் படித்த போதும் சரி, வடமொழி இலக்கிய வரலாற்றை ஆங்கில வழிப் படித்தபோதும் சரி, இருக்குவேதம் தவிர மற்றவை சலிப்பூட்டுபவையாகவே தெரிந்தன. 1948-இல் 'பொன்னி' மாத ஏட்டில் பன்மொழிப் புலவர் கா. அப்பாத் துரையார் வடமொழி இலக்கியம் என்ற கட்டுரை என்னைப் பல வழியிலும் விழிப்படைய வைத்தது. அடுத்து, பேரா. வையாபுரிப் பிள்ளை இலக்கிய உதயம் இரண்டாம் பகுதியைப் படித்த போது 1952 -இல் மேலும் நல்லெண்ணம் தோன்றியது. பிறகு நவாலியூர் நடராசனை நான் இலங்கைக்குச் செல்லுமுன் தமிழகத்தில்(1979) கண்டேன்.