பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

எதிரொலிக்கப்படுகின்றனவோ, எவனுடைய அகற்சி நெடுந்தோள் போலுள்ள திக்கு திசைகளினால் உறுதி செய்யப்படுகின்றனவோ, எவனுடைய நீள் நெடுந் தோள்கள் வையகத்தையே அனைத்துக் கொள்கின்றனவோ, அந்த ஒருவனுக்கே, அவனுக்கு மட்டுமே, அந்தப் பேரொளியோனுக்கு மட்டுமே எங்களை முழுமையாக அளித்துக் கொள்கிறோம்.

(இருக் 10)

மண்ணுலகைப் படைத்தவன் நமக்கு என்றும் தீங்கு இழைக்காமலிருப்பானாகுக. ஈரேழு பதினான்கு உலகங்களையும் படைக்கிறவன் அவன், வடிவங்களை மதிக்கிறவன் அவன், பளிங்கு போல் தூய ஆற்றலுள்ள தண்ணிரை வழங்குபவன் அவன். அவனையன்றி வேறு எந்தக் கடவுட்கு நாம் நம்மை அளிக்கவேண்டும்? (இருக் 10)

எல்லாப் படைப்புகட்கும் தந்தையே, நீ மட்டுமே உன்னால் படைக்கப்பட்ட யாவற்றின் மேலும் அன்பு காட்டுகிறாய். எங்களுடைய வேண்டுதல்களைப் நிறைவு செய்பவன் உன்னையன்றி எவருமில்லை. அவனையன்றி வேறு எந்தத் தெய்வத்திற்கு நாம் நம்மை உரிமையாக்கிக் கொள்ளவேண்டும்?

(இருக் 10)

த.கோ - தி.பூரீ *#ు