பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

!

ሾጅ« 72

மனமே நினைவாற்றலின் இருப்பிடம். மனம் செயல்படாவிடில், எக்காரியமும் நடைபெறாது. ஓ, மனமே, உயர்ந்த நோக்கு எது என்பதைத் தீர்மானிக்க வேண்டியது நீ தான். (யசுர் 34)

தேர்ந்த சிறந்த தேரோட்டிபோல், நம்மை வழி நடத்திச் செல்வது மனம். விரைந்து நடைபோடுகிற குதிரைகளைக் கடிவாளமிட்டு அடக்குவது மனம். விரைவும், வீறியமும் உள்ளது மனம். நெஞ்சத்தில் நிலைத்திருப்பது மனம். - ஓ, மனமே. உயர்ந்த நோக்கு எது என்பதைத் தீர்மானிக்க வேண்டியது நீ தான். (யசுர் 34)

கடந்தகால, நிகழ்கால நிகழ்வுகள் பதிந்திருப்பது மனத்தில் தான். r நற்செயல்கள் யாவும் நிகழ்வது ஏழு புலன்களின் செயற்பாட்டினால் தான். மனமே அறிவற்ற ஊக்க எழுச்சி. ஒ, மனமே, உயர்ந்த நோக்கு எது என்பதைத் தீர்மானிக்க வேண்டியது நீ தான். (யசுர் 34)

தேராழியின் ஆரங்கள் போல் இருக், சாம, யசுர், வேத வாய்மொழிகள் ஒன்றுடனொன்று தொடர்புள்ளவையாக, நம் உள்ளத்தினுள் இடம் பெற்றுள்ளன. ஓ, மனமே, உயர்ந்த நோக்கு எது என்பதைத் தீர்மானிக்க வேண்டியது நீ தான். (யசுர் 34)

நற்றமிழில் நால் வேதம்