பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8O

இயற்கை ஆற்றல்களுடன் தொடர்புள்ள அறிவர்களே,

தி எங்களுக்கு கிெழ்ச்சி அளியுங்கள். (இருக் 3)

!.

y குற்றமொன்றுமில்லாத குணக் குன்றே, தங்கள் தீர்ப்பில்

நாங்கள் பாவம் செய்யாதவர்களாக இருக்க வேண்டும். பாவம் புரிந்தவனுக்கு நீ கருணை காட்டுகிறாய், உலக நாயகியின் கட்டளைகளை நாங்கள் நிறைவேற்ற வேண்டும், வாழ்த்தி அருளுங்கள், வாழ்த்தி அருளட்டும் அன்னை. (இருக் 7)

பேரொளியானே, ஊட்டமளிப்பவனே, மகிழ்ச்சியான வாழ்க்கை, அமைதி, வளமை இவற்றை எங்களுக்கு வழங்குவாயாக. நிற்காமல் நிலைக்காமல் நகர்ந்து கொண்டேயிருக்கும் தெய்வீகத் தேரில் அமர்ந்திருக்கும் இறைவனே, என்றும் எங்களுக்குச் செல்வம், அறிவு, மகிழ்ச்சியை அளித்துக் கொண்டிருப்பாயாக. (இருக் 1)

எங்களுக்கு நீ அளித்திடும் சீரிய மெய்யறிவையும் உற்சாகத்தையும் மேலும் மேலும் வளர்த்துக் கொள்வோமாக. துதி பாடல்கள் மூலம் உனக்கு நாங்கள் விடுக்கும் கோரிக்கைகளுக்கு இரங்கி, இறைவா, வரும் காலத்திற்கும் எங்கள் பணி பயன்பட அருள் புரிக. (இருக் 2)

t

ஒளியும், பொலிவழகும் நிறைந்த எம் அரசே, எங்களுக்கு செழுமை அளி.

விண்ணுலக நாயகியும், செல்வத்தின் அதிதேவதையும் పే. நற்றமிழில் நால் வேதம்