பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

ஒற்றுமையையும், சமுதாயத்தில் நல்லினக்கதினையும் ஏற்படுத்துவதே. எங்களை வாழ்த்தி அருளுங்கள், இறைவா. (இருக் 7)

ஆக்கமான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் சமுதாய வளத்தை நிலை நிறுத்துவதில் ஈடுபடுத்திக் கொள்பவர்கள், ! சமுதாயத்தில் அமைதியை ஏற்படுத்தட்டும் பரந்த நிலமும் தன் விளைச்சல்கள் மூலம் அமைதியையும் வளத்தையும் கொணரட்டும். விரிந்து பரந்த விண்ணுலகமும் மண்ணுலகமும் அமைதியையும் இணக்கத்தையும் கொணரட்டும். மலைகள் அமைதியையும் பணிவையும் புகட்டட்டும். இயற்கையின் கருணையைப் புகழ்ந்து பாடும் நமக்கு அமைதி கிடைக்கட்டும். (இருக் 7)

தன் செந் நாக்குகளின் ஒளிகொண்டு தீ அமைதி அளிக்கிறது. புடவியின் ஒளியும் இரட்டையான அசுவினி குமாரர்களும் அமைதி பெறுகிறார்கள். ஓங்கி வீசும் காற்றும் நம் உடலுக்கும் உள்ளத்திற்கும் அமைதி அளிக்கட்டும். (இருக் 7)

ஆதி காலம் தொட்டு வழிபட்டுவரும் விண்ணுலகும், மண்ணுலகும் எங்கள் மகிழ்ச்சிக்கு உதவிட நீ வாழ்த்துக் கூறுவாய். நல்ல உடல்நலமும், மலர்ந்த தோற்றமும் எங்களுடையதாகட்டும். - காடுகளில் வளரும் மூலிகைச் செடிகளும், மரங்களும் மகிழ்ச்சியூட்டுகின்றன.

t

நற்றமிழில் நால் வேதம்