பக்கம்:நற்றிணை-2.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

/* 5_! சொற்பொருள் : பிடவம் . பி டா மரம். ஈர்மை - குளிர்ச்சி. தளவம் - முல்லை. மணி - நீலமணி. காயா - காயா மரம். கஞல விளங்கித் தோன்ற; பூவும் தளிருமாக அழகுடன் தோன்ற, சாலை - பொழுது; காலைப் பொழுதும் ஆம். வல்விரைந்து - மிக விரைந்து. கழி - உப்பங்கழியின் நீர், களர்பட்ட நிலப்பகுதி. மடமான் - இளமான்; என்றது பிணையின. காமர் - விருப்பம். இரலை ஏறு - ஆண்மான். பேதை - குலத்தொழில் அறியாத சிறு குட்டி. விளக்கம்: 'இலையில் பிடவம்' என்றது, கோடையில் இலையுதிர்த்து நின்ற பிடவினது பழைய தன்மையை; அது தான் ஈர்மலர் அரும்பின என்ருன், அவ்வாறே வாடியிருக் கும் தலைவியும் புதுப்பொலிவு பெறுதலை நினைக்கின் முன். புதலிவர் தளவம் பூங்கொடி அவிழ்தலைக் காண்கின்ருன், அவள் தன்னைத் தழுவிப் பெறுகின்ற மகிழ்வைக் கருது கின்ருன். பொன்னென மலர்ந்த கொன்றை காண்பான் அவள் பொன்மேனியையும், காயாவின் கருநீல மலரைக் காண்பாள் அவள் கூந்தலையும் எண்ணுகின்ருன் என்று கொள்க. - நற்றிணை தெளிவுரை பேதைமையால் இனத்தினின்றும்பிரிந்து சென்ற தன் சிறுகுட்டியோடு சென்ற பிணையைத் தேடி நிற்கும் இரலை ஏற்றைக் காட்டின்ை, தானும் புதல்வைேடு வருந்திய படியிருந்து, பிறர்போல இன்புற்றிராது ஒதுங்கி நிற்கும் தன் தலைவியை விரைய்ச்சென்று சேர்தலை விரும்புகின்ருன். 'களர் நிலம்’ என்றது, அதன் செடி கொடியற்ற தன் மையைக் காட்டுதற்கு; அதன் கண் மான்குட்டி ஓடியது பேதைமையால் என்க; இதனைக் கேட்டலுறும் பாகனும் தேரை விரையச் செலுத்துவானவன் என்பது இதனைக் கூறியதனுல் விளையும் பயன் ஆகும். 243. அறத்தினும் பொருள் அரியது! பாடியவர் : க்கணி நப்பசலையார்) திணை : பாலை. துறை : பிரிவிடை மெலித் லைழகள்சொல்லியது. (து.வி.) தலைவனின் பிரிவிடையே மெலிந்த தலைவி யானவள், அறமும் பொருளுமாகிய வாழ்க்கைக்கு உறுதிப் பொருள்கள் பற்றிய சிந்தனையிலே ஈடுபட்டு நோகின்றது போல அமைந்த செய்யுள் இது.) -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/100&oldid=774091" இலிருந்து மீள்விக்கப்பட்டது