பக்கம்:நற்றிணை-2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 99 துயர்மருங்கு அறியா அன்னைக்கு இந்நோய் தணியுமா றிதுவென உரைத்தல் ஒன்றே செய்யாய் ஆதலிற் கொடியை தோழி மணிகெழு நெடுவரை அணிபெற கிவந்த செயலே அந்தளிர் அன்னவென் 10 மதனின் மாமெய்ப் பசலையுங் கண்டே. தெளிவுரை : தோழி! மணிகள் நிரம்பக் கிடந்து ஒளி யெறிக்கின்ற நெடிதான மலைப்பக்கத்தே, அழகுண்டாக உயர்ந்து நிற்கும் அசோகினது செவ்விய தளிரைப் போன்ற தாகிய என் நல்ல மேனியினது அழகானது முற்றவும் கெடும் படியாகச் செய்த, வலியிழந்த என் மாமைநிற மெய்யிற் படர்ந்துள்ள இப்பசலை நோயினை நீயும் கண்டன. கண்டும், மழை பெய்தமையாலே பெரிதும் குளிர்ந்து போயுள்ள மலைச்சாரற் பகுதிகளிலே, கூதிர்க்காலத்தே பூப்பதாகிய கூதளத்தின் பூக்கள் மலர்ந்து மணம் பரப்பியபடி இருக்கும். அப் பூக்களின் பால் மொய்க்கின்ற அழகிய வண்டுகளின் இனிதான இசைக்குரலை, மணம் வீசும் பக்கமலையிடத்தே யுள்ள அசுணமாவானது, யாழோசையென மயங்கிக் கேட்ட படியும் இருக்கும். அத்தகைய உயர்மலை நாடனுக்கு, "இந் நோய் தீர்தற்கான வழிதான் இது வெனச் சொல்லுதலான ஒன்றையோ, அல்லது, "நாம் படுகின்ற துயருக்குரியதான காரணந்தான் இதுவென அறியாதாளான அன்னைக்கு, இந்நோய் தணியும் வழிதான் இது என உரைத்து, அறத்தொடு நிற்ற லான ஒன்றையோ, நிதான் செய்கின் ருய் அல்லை! ஆதலின் நீதான் கொடியை யாவாய் காண்! சொற்பொருள் கூதிர் - கூதிர்காலம். கூதளம். கூதாளி எனப்படும் கொடியினம். அலரி - அலர்ந்த பூக்கள். மாதர் - அழகிய. நயவரும் - விருப்பம் வரச் செய்யும். தீங்குரல் - இனிதான இசைக்குரல். அசுணம் - அசுணமா, புள் எனவும் கொள்வர். மணி - நீலமணி. செயலை - அசோகு. மதன் . வலி. மாமெய் - மாமைக் கவின் கொண்ட மெய். ೧ಠಿrಹಕರು : 'I0676 நாறு சிலம்பு’ என்றது, வேறு பல வாய பூக்களின் மணத்தோடுங் கூடியதாக மண்ணின் குளிர்ந்த மணமும் கலந்து மணப்பதைக் குறித்ததாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/101&oldid=774092" இலிருந்து மீள்விக்கப்பட்டது