பக்கம்:நற்றிணை-2.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 நற்றிணை தெளிவுரை கண்ணும் ஆம். கவறு - சூதாடு காய்; இஃது உருண்டோடு தலின், குதினை உருளாயம் என்று குறளினும் உரைப்பர் (குறள். 933), கையற - செயலற. மேவர - வி ரு ப் பம் உண்டாக. விளக்கம் தெள்ளறல் தழிஇய துறுகல் அயல தூமணல் அடை கரையாவது, மலையிடத்துச் சுனையைச் சார்ந்த அடைகரை என்க. மழைநீர் சுனையை நோக்கி ஓடி வந்து வந்து தூயமணல் அப்பகுதியிற் செறிந்திருக்கும் என்பதாம். ஊடினீர் எல்லாரும் உருவிலான் தன்னுணை, கூடுமின் என்று குயில் சாற்ற' எனப் பிறரும் குயிற்குரலுக்கு இவ்வாறு பொருள் கொள்வர். "அகறல் ஒம்புமின் அறிவு டையீர்’ என்றலின், அகன்று போதலைச் செய்பவர் அறிவிலர் என்பதும் பெற வைத்தனர். மேவர நுவல’ என்பது கூடியிருப்பார்க்கு அக் குரல் தான் பெரிதும் இன்பந் தருதலின், அவர் விரும்பும்படி யாகக் கூவி என்றும் பொருள் கொள்ளப்படும். 'இன்ன வாகிய காலை என்றது பிரிதற்கு உரியதல்லாத காலத்தின. 'அரிது மன்றம்ம அறத்தினும் பொருளே’ என்று ஆடவரைக் குறித்துக் கூறியது, அது பெண்டிர்க்கு என்றும் இயல் பாகாது என்பதலுைமாம். பிரிவிடத்தும் அவனை நோவாமல், ஆடவரது இயல் பைக் குறித்தே மனம் வெதும்பும் தலைவியது உள்ளச் செவ்வியை எண்ணி உணர்ந்து இன்புறல் வேண்டும். 244 மாதர் வண்டின் தீங்குரல்! பாடியவர் கூற்றங் குமரனர். திணை : குறிஞ்சி. துறை : அறத்தொடுநிலை வலித்த தோழியைத் தலைவி முகம்புக்கது. (து.வி.) வரைவிடை வைத்துப் பிரிந்துறைந்த காலத் திலே, தலைவியின் நலங்கெடக் கண்ட தோழி, இனி நமரா வார்க்கு உண்மை அறிவுறுத்தி வரைவு எதிர் கொள்ளு விப்பன்’ என்கின்ருள். அவளுக்குத் தலைவி தன் ஆற்ருமை தோன்றக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.) விழுந்த மாரிப் பெருந்தண் சாரல் கூதிர்க் கூதளத்து அலரி காறும் மாதர் வண்டின் நயவருங் தீங்குரல் மணநாறு சிலம்பின் அசுணம் ஒர்க்கும் உயர்மலை நாடற்கு உரைத்தல் ஒன்ருே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/102&oldid=774093" இலிருந்து மீள்விக்கப்பட்டது