பக்கம்:நற்றிணை-2.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 - நற்றிணை தெளிவுரை ! செய்ய்ாய்; ஆதலிற் கொடியை என்றது, செய்யின் எனக்கு இனியை என எதிர்மறைப் பொருள்படக் கூறியதாகக் கொள்வதுமாம். உயர் மலை நாடன்” என்றது, நீ அவன் பாற் குறையைக் கூறின், விரைந்து குறைமுடிக்கும் உயர் பண்பினன் அவன் என்றதும் ஆம். அன்னை வெறியயர்தல் குறிகேட்டல் முதலாயின செய் தற்கண் ஈடுபட்டுக் கவலையுறல் கண்டும், அதனைத் தடுக்கு மாற்ருல், 'நாடனது மார்பு செய்த இந்நோய்க்கு மருந்து அவனே' எனக் கூறி அறத்தோடு நில்லாமையை நினைவாள், அதுதானும் செய்திலை என்றனள். இதன் பயன், தோழி அறத்தோடு நிற்றலைச் செய்ய முற்படுவாள் என்பதாம். உள்ளுறை : கூதாளியிலே மொய்த்து இசைக்கும் வண்டின் குரலை யாழிசைபோலும் என மயங்கும் அசுணமாப் போலே, தலைவன் நலனுண்டு துறத்தலாலே வேறுபட்டு விட்ட என் நோயை முருகு அணங்கியது போலும் என அன்னையும் பிறழ உணர்ந்தனள் என்பதாம். மேற்கோள் : (1). 'அறத்தோடு நிற்கும் காலத்தன்றி, அறத்தியல் மரபிலள் தோழி என்ப' என்னும் தொல்காப் பியச் சூத்திர (203) உரைக்கண், இச் செய்யுளை எடுத்துக் காட்டி, இது தலைவி அறத்தொடு நிற்குமாறு’ என்பர் இளம் பூரணர். (2) உயிரினும் சிறந்தன்று நாணே என்னும் சூத்திர உரைக்கண் (113) இதனை எடுத்துக் காட்டி, இஃது அறத் தொடு நிற்குமாறு தோழிக்குத் தலைவி கூறியது' என்பர் நச்சினர்க்கினியர். - 245. சுரும்பிமிர் சுடர் நுதல்! பாடியவர் : அல்லங்கீரனர்; அள்ளங் கீரனர் எனவும் பாடம். திணை : நெய்தல். துறை: குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது. ((து - வி.) தலைமகனுக்காகக் குறைமுடிக்க இசைந்த தோழி, தலைவியிடம் வந்து, அவள் கருத்தை வயப்ப்டுத்தக் கருதியவளாகச் சொல்வதுபோல அமைந்த செய்யுள் இது. சொல்லாடலின் நுட்பம் அமைந்துள்ளமை காண்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/104&oldid=774095" இலிருந்து மீள்விக்கப்பட்டது