பக்கம்:நற்றிணை-2.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை i03 இடுஉ ஊங்கண் இனிய படுஉம் நெடுஞ்சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும் மனைமர நொச்சி மீமிசை மாச்சினை வினைமாண் இருங்குயில் பயிற்றலும் பயிற்றும் உரம்புரி உள்ளமொடு சுரம்பல நீந்திச் 5 செய்பொருட்கு அகன்றனர் ஆயினும் பொய்யலர், வருவர்-வாழி தோழி-புறவில் , or பொன்வீக் கொன்றையொடு பிடவுத்தளை யவிழ் இன்னிசை வானம் இரங்குமவர் "வருதும் என்ற பருவமோ இதுவே? - 10 தெளிவுரை : வாழ்வாயாக தோழி! நாம் குறிப்பிட்ட ಕ್ಲಿಪ್ಗಿ! இனிய சொல்லும் செயலுமே நற்குறிகளாக கழ்கின்றன. நெடிய சுவரிடத்தே இருக்கும் பல்லியும் நம் பக்கத்தேயாய் அமைந்து நம்மைத் தெளிவிக்கின்றது. மனையிடத்தே வேலியாக அமைந்துள்ள நொச்சிமரத்தின் மேலாக, உயரமாக வளர்ந்துள்ள மாமரத்துக் கிளையிலிருந்த படியே, இனிமையுண்டாகக் கூவுதலிலே தேர்ந்த கருங் குயிலும் தன் குரலினை எடுத்துக் கூவாநிற்கும். திட்பம் கொண்ட உள்ளத்தோடே பலவான சுரங்களையும் கடந்து சென்று, பொருளைச் செய்தலைக் குறித்து நம்மை விட்டுப் பிரிந்து போனவர் நம் தலைவர். ஆயினும், அவர் தாம் குறித்துச்சென்ற காலத்தைப் பொய்ப்பதிலர்; உறுதியாக வந்து சேர்வர். காட்டினிடத்தே நிற்கும் பொன்னிறப் பூக்களைக் கொண்டவரான கொன்றை மரங்களோடு, பிடா மரங்களும் அரும்பு முகிழ்த்து மலர்தலைச் செய்கின்றன. இனிதாக முழங்குதலையுடைய மேகமும் முழங்கா நிற்கும். அவர் வருவேம்’ எனக் குறித்த பருவமும் இதுவேயாகும். அவர் இன்னே வருவர்காண்! - சொற்பொருள் : இடுஉ ஊங்கண்-குறிப்பிட்ட இடங்கள். இனிய படுஉம்-இனிய குறிகள் தோன்றும். பாங்கில்-நம் பக்கமாக; நமக்கு ஆதரவாக. மனே மர நொச்சி-மனைக்கு வேலியாக அமைந்துள்ள நொச்சிமரம். மாச்சினை-மாமரக் கிளை. வினைமாண்.தன் வினையிலே மாண்புடைய; அது இனிமை பயப்பக் குரலெடுத்துக் கூவுதலாகிய செயல். உரம் - உள்ளத் திண்மை; அது காதலியைப் பிரியத் துணிதலும், சுரநெறிக்கண் துணிவோடு சென்று கடத்தலு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/105&oldid=774096" இலிருந்து மீள்விக்கப்பட்டது