பக்கம்:நற்றிணை-2.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 105 தெளிவுரை : பழைமையுற வந்த வலிமையோடும் மாறுப்ாடும் மிக்கெழலாலே சினங்கொண்டு, புலியைக் கொன்ற களிற்றினது சிவந்த கோட்டினைக் கழுவுமாறு. இரவிலே வீழ்கின்ற மழையைப் பொழிந்தது, இனிய இடிக் குரலையுடைய மேகம். அதுதான், பிற்றைநாளின் வைகறைப் பொழுதிலே, இருப்பு வில்லாலே அடிக்கப்பட்டு நொய்ம்மை யாகிப்போன பஞ்சைப் போலவாகிப் பரந்து, உச்சியுயர்ந்த .ெ ந டி தா ன மலைப்பக்கத்தே இயங்கியபடி யிருக்கும் நாட்டிற்கு உரியவனே! நீ இவள்ை வரைந்துகொண்டு இவளுக்கு அருளிச்செய்யாய் ஆயினும், நின் தலைமைக்குப் பொருந்தாத செயல்களையே செய்தாய் ஆயினும், நின் உள்ளஞ் சென்ற வழியே தான் நடக்கும் பண்பினள் என் தோழியாவாள். இவளுடைய நல்ல நெற்றியினிடத்தே நிலையாகத் தங்குதலை மேற்கொண்ட பசலை நோய்க்கு மருந்து நின்னையன்றிப் பிறிதொன்று யாதும் இல்லையாதலை நன்கு அறிந்தனையாகி, அதன்மேல் நீயும் நின் வினைமேற் செல்வாயாக! சொற்பொருள் : தொன்றுபடு துப்பு-பழைமையுற வந்த வலிமை. முரண்-மாறுபாடு. பழைய வலிமையோடு முரணும் மிகுதியாகிச் சினமும் எழவே அதன் வன்மை அளவிடற்கரிதாயிற்று என்பதாம். செங்கோடு - சிவந்த கோடு; சிவந்தது புலியின் குருதி படிந்ததால். எஃகு-பஞ்சு கொட்டும் இரும்புவில். வைகறை-விடியற்காலம். கோடுஉச்சி. நயனில-தகுதிக்கு மாறுபட்டன; இது 蠶 அருளாமையும், அவர்க்குத் தன்னலே வருத்தம் தோன்ற செய்தலும். இருந்து இறைகூடிய பசரீல-நிலையாகத் தங்கி யிருந்து படர்ந்த பசலைநோய்; விருந்திரை' எனவும் ப்ாடம். விளக்கம்: பெயல் நீங்கிய மேகங்கட்கு அடிக்கப்பட்டு நொய்தான பஞ்சை உவமையாகக் கூறினர். வரைவிடை வைத்துப் பிரியலுற்ற தலைமகனுக்குச் சொல்பவளாதலின் தான் தலைவிக்குத் தேறுதல் பல கூறித் தெளிவித்தமை தோன்ற, நிள் வழிப் படுஇம் என் தோழி' என்றனள். இதல்ை, அவன் சென்று வினைமுடித்து விரைந்து வந்து தலைவியை வரைந்து இல்லற வாழ்வில் இன்புறுத்தல் வேண் டும் என்பதாம். 'பசலைக்கு மருந்து பிறிதின்மை நன்கு அறிந்தனை சென்மே என்றது, நின்னையன்றி இவளைக் காப்ப வர் பிறர் யாருமில்லை என்றதாம். இவள் நோய் பிறரால் அறியப்பட்டுப் பழியுரைக்கு ஏதுவாக, அதல்ை இவள் உயிர் தரியாளாதலும் கூடும் என்றும் சொன்னதாம். i தற்.-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/107&oldid=774098" இலிருந்து மீள்விக்கப்பட்டது