பக்கம்:நற்றிணை-2.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i04 - நற்றிணை தெளிவுரை மாகிய மனத்திட்பம். நீந்தி. முயற்சியோடு கடந்து சென்று. புறவு - காடு. இன்னிசை வானம் - இனிதாக முழங்கும் மேகம்; முழக்கம் இனிதாதல், இது அவர் வருவதாகக் குறித்த பருவத்தினது வரவை அறிவித்தலால். விளக்கம் : கட்டுக் காணுதலும், பல்லி சொல்லுக்குப் பலன் காணலும் பண்டைய வழக்கம் என்பது இச் செய்யுளால் அறியப்படும். மனைவயிற் பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன, நல்லெழில் உண்கணும் ஆடுமால் இடனே' எனக் கலித்தொகையுள்ளும் (கலி 11) இவ் வழக்கம் கூறப்படும் செய்தற்கு உரிய பொருளைச் செய் பொருள் என்று கூறினுள். அவர் தவருதே வருவர்; நீயும் அதுவரை பொறுத்திருப்பாயாக’ என்று தெரிவிக்கின்ருள் தோழி. இதனைக் கேட்கும் தலைவியும் தன் துயரத்தை ஆற்றியிருப்பாளாவள் என்பது இதன் பயனுக விளங்குவ தா.ம. 247. எஃகுறு பஞ்சின் எழிலி: பாடியவர் : பரணர். திணை : குறிஞ்சி துறை : ... 'நீட்டியாமை வரை எனத் தோழி சொல்லியது. ((து.வி.) வரைவிடை வைத்து வேந்துவினைமேற் பிரியக் கருதிய தலைவன நெருங்கி, நின்னைப் பிரியின் இவள் மெலிவுற்று அழிவாள்' எனக் கூறி, விரைந்து வன்ர்ந்து கொள்க’ எனத் தோழி வற்புறுத்திக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.) தொன்றுபடு துப்பொடு முரண்மிகச் சின.இக் கொன்ற யானைச் செங்கோடு கழாஅ வழிதுளி பொழிந்த இன்குரல் எழிலி எஃகுறு பஞ்சிற் ருகி வைகறைக் கோடுயர் நெடுவரை ஆடும் நாட! நீ 5 நல்காய் ஆயினும் நயனில செய்யினும் நின்வழிப் படுஉம்என் தோழி நன்னுதல் இருந்திறை கூடிய பசலைக்கு மருந்துபிறி தின் மைகன்கு அறிந்தன சென்மே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/108&oldid=774099" இலிருந்து மீள்விக்கப்பட்டது