பக்கம்:நற்றிணை-2.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 நற்றிணை தெளிவுரை இதனைக் கேட்டலுறுபவன், தலைவியை வரைந்து கொள்ளுதற்கே முதற்கண் முற்பட்டவகைத் தான் வினை மேற் செல்லுதலையும் சிலகாலம் தள்ளிப்போடுபவனவான் என்பதாம். உள்ளுறை: புலியைக் கொன்ற களிற்றின் கோட்டைக் கழுவும்படி இரவில் மழைபொழிந்த மேகம், வைகறையில் வரைமீது நொய்மையுற்ற பஞ்சினைப்போல் இயங்கும் என்றது, வேற்றரசை வெல்லுதல் குறித்த போரில்ே நீ பட்ட புண்களை எல்லாம், இவள்தான் தன் தழுவுதலாலே போக்கி விட, நீயும் எளியையாய் இவளோடு கூடியவகை இல்லி லேயே இருப்பவனவாய் என்றதாம். இரவில் பெய்த கார் மேகம் வைகறையில் விளர்த்துப் போவதைப்போல, நின் ேைல தலையளி செய்யப்பெற்றுப் பூரிப்படைந்த இவள் மேனியின் எழில் நலம், வைகறையில் நீ அகலவும், கெட்டு வெளுத்துப் போதலும் நிகழும் என்றதுமாம். 248. மயில்போல் மருள்வேனே? பாடியவர்: காசிபன் கீரனர். திணை முல்லை. துறை: பருவங்கண்டு ஆற்ருளாகிய தலைமகளைத் தோழி மழைம்ேல் வைத்துப் பருவம் மறுத்தது. - ((து.வி.) கார்ப்பருவம் வந்தது; அவர்தாம் வந்தார் அல்லர் என்று வாடி நலனழிந்த தலைவிக்கு, இது உண்மை யான கார்காலத்தின் தொடக்கம் அன்று எனத் தோழி கூறி, அவளைத் தெளிவிக்க முயல்வதுபோல் அமைந்த செய்யுள் இது.) சிறுவி முல்லைத் தேங்கமழ் பசுவீ பொறிவரி நன்மான் புகர்முகங் கடுப்பத் தண்புதல் அணிபெற மலர வண்பெயல் கார்வரு பருவம் என்றனர் மன்இனிப் பேரளுர் உள்ளம் நடுங்கல் காணியர் 5 அன்பின் மையிற் பண்பில பயிற்றும் பொய்யிடி யதிர்குரல் வாய்செத்து ஆலும் னமயில் மடக்கணம் போல நினைமருள வேனே! வாழியர், மழையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/110&oldid=774102" இலிருந்து மீள்விக்கப்பட்டது