பக்கம்:நற்றிணை-2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 109 குறித்த பழிச்சொற்கள் எழுந்தன. இவ்வாறு, வந்தும் நமக்கு அருளாதபடி சென்றது அல்லவோ நமது கொண் கனின் தேர்! அவன்தான் இனி மீண்டும் இவ்வூரிடத்தே வந்து நம்மையும் வரைந்து மணந்து கொள்வானே? யான் எவ்வாறு உயிர் வாழ்வேன்? சொற்பொருள்: பாசிலை-பசிய இலைகள். இணர்-பூங் கொத்து. பூ நாறு.பூமணம் கமழும். குரூஉச் சுவல்-நிறம் கொண்ட மணல்மேடு. புலிசெத்து-புலிபோலும் என மயங்கி. பரி-விரைந்த செலவு. வயங்குதாள்-வலியமைந்த கால்கள். தகைவரை-நிற்கும் எல்லைக்கண். மல்லல்-வளமை. கொண் கன்-நெய்தல்நிலத் தலைவன். விளக்கம்: பூமணங் கமழ நிறம்பெற்று விளங்கும் மணல்மேட்டின் மேலாகப் புன்னையின் பூந்தாது உதிர்ந்து கிடந்ததனைப் புலிபோலும் எனக் கொண்டு அஞ்சிய குதிரை கள், கட்டுக்கு அடங்காவாய்ப் பந்துபோலத் துள்ளிக் குதித் தன என்க. இதல்ை ஊரவர் வந்து கூடி ஆர்ப்பரிக்க, ஊரி டத்தே பழியும் எழலாயிற்று. இதல்ை அவமானம் அடைந் தான் அவன். அவன் இனியும் இவ்வூரிடத்தே வந்து என்னை யும் வரைந்து மணந்து கொள்வானே என்று ஏங்குகின்ருள் தலைவி. சேரி' என்பது ஊரின் புறத்தே ஒரு சாரார் சேர்ந்து இருப்பது. அதனைக் கடந்து சென்ருல் உயர்குடியினர் வாழும் மூதூர் இருக்கும். வெருவிய குதிரைகள், சேரியி னுள்ளே, சேரி கல்லெனப் புகுந்து சென்று, அம்பல் மூதூர் அலர் எழுமாறு அதனுள்ளும் போயினதாகச் சென்று மறைந்தது என்பதும் கருத்தாகும். 250. நகுகம் வாராய்! பாடியவர் : மதுரை ஒலைச்கடையத்தார் நல்வெள்ளை யார். திணை: மருதம். துறை : புதல்வைெடு புக்க தலைமகன் ஆற்ருளுய்ப் பாணற் குரைத்தது. ((து. வி.) பரத்தை உறவிலே மகிழ்ந்தவகைச் சில காலம் த லை வி ைய ப் பிரிந்திருந்த தலைவன், ஒரு சமயம் தன் வீட்டின் பக்கமாக வருகின்ருன். தெருவிலே சிறுதேர் உருட்டி விளையாடும் தன் புதல்வனக் கண்டதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/111&oldid=774103" இலிருந்து மீள்விக்கப்பட்டது