பக்கம்:நற்றிணை-2.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 நற்றி&ன தெளிவுர்ை அவன் வந்து, செவ்விநோக்கி ஒரு சார் ஒதுங்கி நிற்பதையும் அறிந்தவள், இப்படித் திணையை நோக்கிக் கூறுகின்ருள். இவ்வாறு அமைந்த செய்யுள் இது.) கெடுர்ே அருவிய கடும்பாட் டாங்கன் பிணிமுத லறைய பெருங்கல் வாழைக் கொழுமுதல் ஆய்கனி மந்தி கவரும் நன்மலை நாடனே கயவாய் யாம்அவன் அளிபே ரன்பின் இன்குரல் ஒப்பி - 5 கின்புறங் காத்தலும் காண்போய் நீயென் தளிரேர் மேனித் தொல்கவின் அழியப் பலிபெறு கடவுட் பேணிக் கலிசிறந்து தொடங்குகிலப் பறவை உடங்குகுரல் கவரும் தோடிடங் கோடாய், கிளர்ந்து 10 நீடிகின விளைமோ வாழிய தினேயே! தெளிவுரை : தினப் பயிரே! நெடிதான நீர்மையை யுடைய அருவிகளின் பேரொலியானது எழுந்தபடியே யிருக்கின்ற அவ்விடத்தே, பிணிப்புண்ட அடியையுடைய பெரிதான மலைவாழையினது, கொழுவிய பருத்த இனிய கனிகளை, மந்திகள் கவர்ந்து உண்ணுநிற்கும் நல்ல மலைக் குரிய மலைநாடன், என் தலைவன்! அவனை நீயும் விரும்பு வாயாக! யாம், அவனது மிகுதியான பேரன்பின் திறத்தாலேயே, இனிய குரல் எடுத்துப் பாடினமாய்க், கதிர்களைக் கொய்யவரும் புள்ளினங்களை எல்லாம் ஒப்பின மாய், நின்னைப் பாதுகாத்திருப்பேம்! இதனையும் நீகண்டிருக் கின்றன! மாவின் தளிரனைய என் மேனியினது பழைய கவின் அழிதலாலே, பலியுண்ணும் கடவுட்கு வழிபாடு செய்வாராய், முருகைக் குறித்துத் தமர் வெறியாடலையும் இனி மேற்கொள்ளுவர். அவ்வாறு அவர் என்னைக் குறித்து வெறி அயர்தலை மேற்கொள்ளும் ஆரவாரமிகுறித அக் காலத்து, யானும் இல்லின்கண் செறிப்பு உறுவேன். ஆதலின், கிள்ளை முதலாய பறவையினம் எல்லாம் ஒருசேரச் சேர்ந்துவந்து, நின் முற்றிய கதிர்களைக் கவர்ந்து போகும். ஆதலினலே, தோடுபொதிந்த நின் கதிர்களைத் தலைசாய்க் காயாய், நிமிர்ந்து நின்று, நெடுநாட் கழித்துக் கதிரீன்று நீயும் விளைவாயாக! தினயே, நீயும் வாழ்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/116&oldid=774108" இலிருந்து மீள்விக்கப்பட்டது