பக்கம்:நற்றிணை-2.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

நற்றிணை தெளிவுரை


252. புனைசுவர்ப் பாவை!

பாடியவர் : அம்மெய்யன் நாகனார். திணை: பாலை. துறை: ‘பொருள் வயிற் பிரியும்’ எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது.

[(து.வி.) ‘தலைவன் பொருள்தேடி வருதலைக் கருதினனாகப் பிரிவான் போலும்’ என, அவனது செயற்பாடுகளிலே கவலையடைந்தாள் தலைவி. அதனைக் கண்டனள் தோழி. ‘இவளது குணநலன்கள் யாவையுமே அவரைத் தடுத்து நிறுத்த வல்லமையற்றன; இனி ஆற்றியிருத்தலே செய்யற்பாலதாகும்’ எனத் தெளிவுற்றனள். அதனைத் தலைவிக்கும் அவள் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

உலவை ஓமை ஒல்குநிலை யொடுங்கிச்
சிள்வீடு கறங்குஞ் சேய்நாட் டத்தம்
திறம்புரி கொள் கையொடு இறந்துசெயின் அல்லது
அரும்பொருள் கூட்டம் இருந்தோர்க்கு இல்லென
வலியா நெஞ்சம் வலிப்பச் சூழ்ந்த 5
வினையிடை விலங்கல போலும் புனைசுவர்ப்
பாவை யன்ன பழிதீர் காட்சி
ஐதேய்ந் தகன்ற வல்குல் மைகூர்ந்து!
மலர்பிணைத் தன்ன மாயிதழ் மழைக்கண்
முயல்வேட் டெழுந்த முடுகுவிசைக் கதநாய் 10
நன்னாப் புரையுஞ் சீரடிப்
பொம்மல் ஓதிப் புனையிழை குணனே!

தெளிவுரை : சுவரினிடத்தே அழகிதாக எழுதப் பெற்ற பாவையினைப் போன்ற, குற்றத்தின் தீர்ந்த காட்சியைக் கொண்டவள்; மெல்லிதாகப் பொருந்தி அகன்ற அல்குல் தடத்தினை உடையவள்; மை எழுதப் பெற்று மலர் பிணைத்தாற் போல விளங்கும், கரிய இமைகளைப் பொருந்தியுள்ள குளிர்ச்சியமைந்த கண்களைக் கொண்டவள்; முயலைப் பிடிப்பது கருதி எழுந்த, விரைந்த செலவைக் கொண்டதும், சினமுடையதுமான நாயினது நல்ல நாவைப் போல விளங்கும் சிறிதான அடிகளைக் கொண்டவள்; திரண்ட கூந்தலையும், புனைந்த இழையையும் உடையாளான தலைவி! இவளுடைய குணங்கள்—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/118&oldid=1509676" இலிருந்து மீள்விக்கப்பட்டது