பக்கம்:நற்றிணை-2.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 119 அங்ங்னம் தங்கிச் செல்வாயாயின் உப்பு வணிகராலே உப்பை விலைமாறிக் கொண்டுவரப் பெற்ற நெல்லினலே சமைக்கப்பெற்ற அரிசிக் காணத்தை நின் குதிரைகள் இன்று உண்ணுதலைச் செய்யவும், நீதான், இவ்விடத்தே, நீலமலர்க்கூட்டம் நறிய் மணத்தைக் கமழுகின்றதான பெரிய மாலையானது புகழுகின்ற மார்பினையாகி, அம்மார் பிடத்தே அணைத்து இன்புறுத்ற்கான நின் துணைவியும் இல்லாதே தனியகைத் தங்குவாயும் அல்லை காண்! அதனல் தங்கிச் செல்வாயாக பெருமானே! . சொற்பொருள்; வண்டல் - மணற்பாங்கிலே சிற்றிலை இழைத்து விளையாடும் மகளிர் விளையாட்டு. தைஇ-புனைந்து; சிற்றில் புனைந்து எனவும், சிற்றில்லில் வைத்து விளையாடு தற்கு ஏற்ற பஞ்சாய்ப் பாவையைப் புனைந்து எனவும் கொள்ளுக. வருதிரை.கரையை நோக்கி வருகின்ற அலைகள். உதைத்தல்.உதைத்து விளையாடல்; அன்றிச் சிற்றிலைச் சிதைக்க வரும் அலைகளை உதைத்து அதனைக் காத்தற்கு முயலலும் ஆம். துனி-வெறுப்பு. ஒலிஇரும் பரப்பு-ஒலியோடு விளங்கும் கடற்கரைப் பரப்பு. அயினி - உணவு. மாதேர்க் குதிரைகள். தொடை-தொடுக்கப்பெற்ற பெரிய மாலை. சேக்குதல் - தங்குதல். நேர்கண் சிறுதடி - நேர் நேராக விளங்கும் இடப்பரப்பாக மறிக்கப்பட்டுள்ள சிறுசிறு உப்புப் பாத்திகள். பிற பயிர் விளைத்தலைப்போல உப்பு விளைத்தலுக்கு மழையின் தேவை வேண்டாவாதலின், "வானம் வேண்டா உழவு என்றனர். வானம் வேண்டா வளனில் வாழ்க்கை’ என அகநானூற்றிலும் இது கூறப் பெறுதலைக் காண்க (அகம். 186). - விளக்கம் நீதான் எமக்கு இனியன பலவும் செய்தனை யாய், எம்மால் விரும்பப்படுகின்றவனும் ஆகி, நின் கருத்தை யும் எமக்கு புலப்படுத்தினை! நின் இரப்புக்கு யாமும் இசையுங்கால் அதற்ை பழிபல வந்தெய்தும். ஆதலின் பலரும் உறங்கும் இரவு வேளையில், எம் விருந்தினனகி, எம் இல்லத்தே வந்து தங்கிச் செல்வாயாக என்கின்றனள், விரைந்து மணந்தாலன்றி அவ்வாறு தலைவியின் இல்லத்தே தங்குதல் தலைவனின் உயர்வுக்கு இயலாமையின், அதனை மறுத்து வரைவு வேட்டனள் ஆயிற்று. இதனைக் கேட்ட லுறும் தலைவனின் உள்ளத்தே தலைவியை விரைந்துசென்று மணத்தலே செயற்கு உரியதென்னும் உறுதிப்பாடு எழும் என்பது முடிபாகும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/123&oldid=774116" இலிருந்து மீள்விக்கப்பட்டது