பக்கம்:நற்றிணை-2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 - நற்றிணை தெளிவுரை 257. இயங்குநர் மடிந்த சிறுநெறி! பாடியவர்: வண்ணக்கன் சொருமருங் குமரனர்; வண் ணக்கன் சேரிக்குமரங் குமரனர் எனவும் கொள்வர். தின : குறிஞ்சி, துறை: தோழி, தலைமகனது ஏதஞ்சொல்லி வரைவு கடாயது. | (து.வி.) இரவுக் குறியினை விரும்பி வருவாளுகிய தலைமகனைத் தோழி நெருங்கி இவ்வாறு உரைக்கின்றனள். வரும் வழிக்கண் ஏதம் மிகவும் உண்டாதலின் யாம் அஞ்சு வேம் எனக் கூறுவதன் மூலம், இரவுக்குறி மறுத்து வரைந்து வருதலை வேண்டுகின்றனள். இவ்வாறு அமைந்த செய்யுள் இது. விளிவில் அரவமொடு தளிசிறந்து உறைஇ மழையெழுந் திறுத்த களிர்துங்கு சிலம்பின் கழையமல்பு நீடிய வானுயர் நெடுங்கோட்டு இலங்குவெள் ளருவி வியன்மலைக் கவாஅன் அரும்புவாய் அவிழ்ந்த கருங்கால் வேங்கைப் ... 5 பொன்மருள் நறுவி கன்மிசைத் தாஅம் நன்மலை நாட! நயந்தன அருளாய்! இயங்குநர் மடிந்த வயந்திகழ் சிறுநெறிக் கடுமா வழங்குதல் அறிந்தும் நடுநாள் வருதி கோகோ யானே. 10 தெளிவுரை: இடிகளின் ஓயாத முழக்கத்தோடே மழை மிகுந்த்தாக எங்கணும் பெய்தலைத் தொடங்கியது; மேகங் கள்'திரண்டு சூழ்ந்து கொண்டதனலே, மலைப்பக்கங்கள் குளிர்ச்சிமிகுந்த ஆயின; மூங்கில்கள் செறிவாக வளர்ந்து நெடிதாகவும் ஓங்கியுள்ள வானளாவும் மலையுச்சியிலுள்ள விளங்கும் வெள்ளிய அருவியானது, அகன்ற மலைப்பக்கங் களிலே வீழ்கின்றது. அவ்விடத்தே, அரும்புகள் இதழ்விரிந் தவாய் மல்ர்ந்திருக்கின்றதும், கரிய அடிமரத்தை உடையது மான வேங்கையினது, பொன்னைப்போலத் தோற்றும் நறிய வான பூக்கள் பாறை மேலாக உதிர்ந்து பரவியபடியிருக் கின்ற, நல்ல மலைநாடனே! வழிப்போவார் யாருமில்லாத படி விள்ங்கும், ஒடுங்கிய, நீர் பெருகி நிற்கின்ற தன்மையது நீ வரும் வழியாகும். அவ் வழியிடையே கடிய விலங்குகளான, புல் முதலானவை வழங்குதல் அறிந்துவைத்தும், நீதான் இரவின் நடுயாமப் ப்ொழுதிலேயே வாராநின்றன! அதனைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/128&oldid=774121" இலிருந்து மீள்விக்கப்பட்டது