பக்கம்:நற்றிணை-2.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை J25 கருதி யானும் நோவா நின்றேன். எம்பால் விருப்புடையை யாகி, இனி அவ்வாறு வருதலை நீக்கினையாய் எமக்கு அருள்தலைச் செய்வாயாக, பெருமானே! சொற்பொருள்: விளிவில் - இ ைட யீ டி ல் லாத படி. அரவம் - இடி முழக்கம். தளி - மழை. உறைஇ . பெய்து. மழை எழுந்து - மேகங்கள் வானத்தே எழுந்து. இறுத்ததங்கிய, நளிர் - குளிர்ச்சி. சிலம்பு - பக்கமலை. கழை - மூங்கில். அமல்பு - செறிந்து. வயம் - நீர்ப் பெருக்காகிய வளம். சிறுநெறி - ஒடுங்கிய வழி. கடுமா - புலி போன்ற கொடிய விலங்குகள். - விளக்கம்: வழியிடையே நினக்கு யாதானும் துன்பம் உண்டாகுமோ?’ என எண்ணி யாம் மிகுதுயர்ப்பட்டுக் கலங்குவேம். ஆதலின். இரவு வருதலைக் கைவிடுக என் றனள். வேங்கைப்பூ கன்மிசைத் தாவும் என்று சொன்னது, அதுதான் மணங்கோடலுக்கு உரித்தான காலமென்பதனை நினைப்பித்ததாம். இயங்குநர் மடிந்த' என்றது. வழக்க மாகப் போதலை மேற்கொள்வாரும் அச்சமுடையவராய்க் கைவிட்டதேைல, யாருமற்றதாக விளங்கிய நெறி என்ற தாம். உள்ளுறை : வேங்கையின் பொன்போன்ற நறிய மலர் கள் தம்மைக் கொய்து சூடுவாரை அற்றவாய்க் கற்பாறை மேல் உதிர்ந்து கிடப்பது போல, நீதான் அருகிருந்து நுகர்ந்து இன்புறுத்தாதலிை ல இவளுடைய நலனும் ய னற்றுக் கொன்னே அழிந்து போதலைச் செய்யும் என்பதாம். இதனைக் கேட்கும் தலைவன், விரைய வந்து வரைத லுக்கு மனத்தே உறுளி கொள்வான் என்பது இக் கூற்றின் பயனுகும். 258. அன்ன செறித்தனள்! படியவர்: நக்கீரர். தின: நெய்தல். துறை: தோழி செறிப்பு அறிவுறீஇயது. - (து. வி.) பகற்குறி வந்து ஒழுகுவானகிய தலைவனிடம் வந்து, தலைவியின் தோழி, தலைவி இற்செறிக்கப்பட்டாள்" என்பதைச் சொல்லி, இனி வரைந்து கொண்டாலன்றி அவளே அடைதல் இயலாது என உரைப்பதாக அமைந்த செய்யுள் இது.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/129&oldid=774122" இலிருந்து மீள்விக்கப்பட்டது