பக்கம்:நற்றிணை-2.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 நற்றிணை தெளிவுரை பல்பூங் கானல் பகற்குறி மரீஇச் செல்வல் கொண்க செறித்தனள் யாயே கதிர்கால் வெம்பக் கல்காய் ஞாயிற்றுத் திருவுடை வியங்கர் வருவிருந்து அயர்மார் 帝 பொற்ருெடி மகளிர் புறங்கடை உகுத்த 5 கொக்குகிர் நிமிரல் மாந்தி, எற்பட அகலங் காடி அசைகிழல் குவித்த பச்சிருக் கவர்ந்த பசுங்கண் காக்கை தூங்கல் வங்கத்துக் கூம்பிற் சேக்கும் மருங்கூர்ப் பட்டினத் தன்னவிவள் 40 நெருங்கேர் எல்வளை ஓடுவ கண்டே. தெளிவுரை: கொண்கனே! கதிர் எறித்தலானே மக்கள் முதலாயினேரின் கால்கள் வெம்புமாறு, கீழைத் திசை மலையிடத்தே தோன்றி எழுகின்ற ஞாயிறும் தேர்ன் றிப் பகற்பொழுதைச் செய்தது. அத்தகைய பகற் பொழுதிலே செல்வ வளத்தையுடைய நம்முடைய பெரிய மனையினிடத்தே விருந்தினர்கள் வந்துள்ளனர். அவர்களை ஒம்புதற்குப் பொன் தொடியினை அணிந்தவரான மகளிர் சமைத்து நிவேதித்துப் புறங்கடையிலே கொக்கின் உகிர் போன்ற வெண்சோற்றைப் போட்டனர். அச் சோற்றைத் தின்றுவிட்டுப், பொழுது மறையும் மாலை வேளையிலே, அகன்ற அங்காடித் தெருவிலேயுள்ள அசைந்தேகும் நிழலி டத்தே குவிக்கப்பெற்றுள்ள பசிய இரு மீனைக் கவர்ந்து, பசுங் கண்களையுடைய காக்கையானது உண்ணும். அதனையும் உண்ட பின்னர்க், கடற்கரையிலே, அலையாலே அசைந்து கொண்டிருக்கின்ற கலத்தினது கூம்பினிடத்தே சென்று அக் காக்கையானது தங்கும். அத்தகைய மருங்கூர்ப்பட்டி னத்தைப் போன்றவளான இவளது, அழகும் ஒளியும் பொருந்திய, நெருங்க அணிந்த வளைகள் கழன்று ஒடுவதனை அன்னையும் கண்டனள். கண்டவள், இவளையும் இவ் விடித்தே காவற்படுத்தினள்: பலவாகிய பூக்களையுடைய கான்ற் சோலையிடத்தே நீ தான் செய்த பகற்குறியிடத்தே, யானும் தனியாகவே வந்து, நினக்கு அதனையும் கூறினேன். இனி, யானும் எம் இல்லுக்குச் செல்வேன். நீதான் இனி இவளை விரைந்து வந்து வரைந்து கொள்ளலைக் கருது வாயாக! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/130&oldid=774124" இலிருந்து மீள்விக்கப்பட்டது