பக்கம்:நற்றிணை-2.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றின தெளிவுரை 127 சொற்பொருள்: பல்பூங்கானல் . பலவாகிய பூக்களை யுடைய கானற் சோலை, மரீஇ - சென்றடைந்து. கொண் கன் - நெய்தல் நிலத்துத் தலைவன். புறங்கடை - வீட்டின் பின்புறம். நிமிரல் - சோறு. எற்பட - கதிர் சாய. பச்சிரு - இருமீன். தூங்கல் அசைதல். வங்கம் . மரக்கலம். சேக் கும் - தங்கும். நெங்கு ஏர் எல்வளை - அழகும் ஒளியும் உடையவாக, நெருங்க அணிந்த வளைகள். விளக்கம் : நின்னைக் கண்டு மகிழாமையாலே பெரிதும். துன்பம் உறுபவள் தலைவி எள்பாள், அவள் உடல் நலித லினலே மெலிவு அடைந்தனளாகத் தன் நெருங்கவணிந்த ஒளிவளைகள் சுழன்று வீழ மெலிந்தனள் என்ருள். அதனைத் தெய்வம் அணங்கிற்று எனத் தாய் இற்செறித்தனள். அவள் வாடாமற்படிக்கு இனி நீதான் அவளை வரைந்து வந்து மணந்து கொள்வாயாக என்கின்றனள். உணவு படைக்கு முன் சிறிது சோற்றைக் காக்கைக்குப் பலியாக இடுதல் மரபு. மருங்கூர்ப்பட்டினம் கீழைக் கடற்கரைப் பகுதி யிலுள்ள பாண்டியர்க்குரிய ஓர் பட்டினம். அதன் வனப் பினை அவளது வனப்புக்கு உவமையாக உரைத்தனள். உள்ளுறை : மகளிரிட்ட பலிச்சோற்றை உண்டபின், ! அங்காடியிற் குவித்துக் கிடக்கும் இருமீனையும் கவர்ந்து உண்ட காக்கையானது, வங்கத்துக் கூம்பிற் சென்று தங்கும் மருங்கூர் என்றனள். இது, பாங்கற் கூட்டத்தாற் பகற்குறி பெற்றும், பாங்கியிற் கூட்டத்தால் இாவுக்குறி பெற்றும் இவள் நலனைத் துய்த்து இன்புற்ற நீயும், இவளே மணந்து வாழக் கருதாயாய், நின் ஊர்க்கண்ணே சென்று இனிதே இருப்பாயாயினை என்று கூறியதாம். இதனை உணரும் தலைவன், தலைவியை மணந்து கொள்ளும் முயற்சிகளிலே ஈடுபடற்கு விரைபவன் ஆவான் என்பதாம்! 259 என்ன செய்வோமோ? பாடியவர் : கொற்றங் கொற்றனர். திணை : குறிஞ்சி. துறை: தோழி தலைமகளைச் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது. -- ((து. வி.) தலைவனின் மனத்தைத் தலைவியை மணந்து கூடி வாழ்த்லிலே செலுத்த விரும்புகின்ருள் தோழி. அதனை அவ்னுக்கு உணர்த்த நினைப்பவள், பதற்குறியிடத்தே, அவன் வந்து ஒரு சார் ஒதுங்கிச் செல்வி பார்த்து நிற்பு

\

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/131&oldid=774125" இலிருந்து மீள்விக்கப்பட்டது