பக்கம்:நற்றிணை-2.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாற்றிலே தெளிவுரை 129 சந்தனத் தேய்வையைக் குறித்தது. அமர்ந்து - விரும்பி. இயைந்த கேண்மை - கூடிய நட்புறவு, கடல் பெயர்தல் - கடல் நீர் வற்றிப்போதல். விளக்கம்: இனி முன்போல அவனைக் காண்பதும், கூடியிருந்து இன்புறுவதும் வாய்த்தல் அரிதாகும் என்றனள், அது நீங்கியவழி யாமும் இறந்துபடலும் கூடும் என்பதும் குறிப்பாகப் புலப்ப்டுத்துவாள், "யர்ங்குச் செய்வாங் கொல்" என்றனள். கடல்நீர் வற்றிவிட, அவ்விடம் மெல்ல மெல்லக் காய்ந்து நிறம் மாறுபட்டாற்போலத் திணைக்கதிர்கள் நீர் வற்றியவையாய்க் காய்தலை அடைந்து வருகின்றன என் கின்றனள், காற்றிலே அசைந்தாடும் பசுந்தினைக் கதிர்களின் தோற்றத்திற்கு விரிதிரைக் கடலின் தோற்றத்தையும், அக் கதிர்கள் காய்ந்தவழித் தோன்றும் நிலைக்கு நீர்வற்றிக் காய்ந்த கடலின் தோற்றத்தையும் கொள்ளுக. 260 மறந்து அமைகலன்: பாடியவர் : பரணர். தின : மருதம். துறை : ஊடல் மறுத்த தலைமகள் சொல்லியது. - ((து. வி.) பரத் தை உறவுகொண்டு தலைவியைப் பிரிந்து சென்றவன், மீண்டுவந்து அவளை விருப்போடு தழுவு கின்ருன்? அவள் சினம் தணிந்திலள் எனினும், அவனைத் தடுக்கவும் செய்யாதவளாக, அவன் குற்றத்தைச் சுட்டி உரைப்பதாக அமைந்த செய்யுள் இது ) கழுநீர் மேய்ந்த கருந்தாள் எருமை பழனத் தாமரைப் பனிமலர் முணஇத் தண்டுசேர் மள்ளரின் இயலி அயலது குன்றுசேர் வெண்மணல் துஞ்சும் ஊர! - வெய்யை போல முயங்குதி முனையெழத் 5 தெவ்வர்த் தேய்த்த செவ்வேல் வயவன் மலிபுனல் வாயில் இருப்பை அன்னவென் ஒலிபல் கூந்தல் கலம்பெறப் புனைந்த முகையவிழ் கோதை வாட்டிய. பகைவன் மன்யான் மறந்தன்ம கலனே! 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/133&oldid=774127" இலிருந்து மீள்விக்கப்பட்டது