பக்கம்:நற்றிணை-2.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130. - 闽ற்றின ogenaar தெளிவுரை : தலைவனே! கருந்தாளுடைய எருமை யானது கழுநீர் மலரை மேய்ந்து உண்ணும்; பழனங்களிலே மலர்ந்துள்ள தாமரையின் குளிர்ச்சியான பூக்களையும் தின்னும்; பின் அதனையும் வெறுத்ததாகி, படையணியிலே சேர்ந்த மறவரைப்போலச் செருக்கோடு நடந்துசென்று, பழனங்கட்கு அயலதாகக் குன்றுபோலச் சேர்ந்துள்ள வெண்மணற் குன்றிடத்தே கிடந்து உறங்கும். இத்தகைய தன்மைகொண்ட ஊருக்கு உரியவனே! - நீதான், இதுபோது என்பால் மிகவும் விருப்ப முடையவனே போல என்னைப் பலகாலும் தழுவுகின்றன! பகைவர் முனைத்து,எழுதலாலே உண்டாகிய போரிடத்தே, அப் பகைவரை அழித்து வெற்றி கொண்ட செவ்வேலை ஏந்திய மாவீரன் விரா அன்' என்பவன். மிக்க நீர்நிலை பொருந்தியதும், அவ்விராஅனுக்கு உரியதுமான இருப்பை யூரைப் போன்றது என் எழில் நலம். தழைத்த பலவாகிய எனது கூந்தலிடத்தே அழகு உண்டாகுமாறு சூடிப் புனைந்த அரும்பு மலர்ந்த புதுப்பூவிலே தொடுக்கப்பெற்ற மாலை யானது வாடும்படியாகப் பிரிந்து போன, பகைவன் அல்லையோ, நீ! அந்த நினது கொடுமையை மறந்து யானும் நினக்கு இசைந்திருப்பவள் அல்லேன். ஆதலின் என்னைவிட்டு அகன்று போவாயாக! - சொற்பொருள் கழுநீர்-செங்கழுநீர். பழனம்.வயல். பனிமலர்-குளிர்ச்சியான புதுழலர். தண்டு-படையணி. மள்ளர்-வீரர். இயலி-நடையிட்டுச் சென்று. வெய்யை. -விருப்பமுடையை. முனை-பகைவர் பகைத்தெழுந்த போர் முனை. தெவ்வர்-பகைவர். வயவன்-வீரன். இவன் இருப்பையூருக்கு உரியவ்னகிய 'விரா அன்; இருப்பைஇருப்பையூர். முகையவிழ் கோதை - அ ரு ம் பாலே தொடுக்கப்பெற்று,மொட்டு மலர்ந்தபடியிருக்கும்.தலைமாலை. விளக்கம் : உண்மையாகவே நீதான் என்னை விரும்பி வந்தவன் அல்லன்' என்பாள், வெய்யை போல’ என்றனள். கோதை வட்டிய பகைவன்' என்றது, அதனைச் சூடியதன் பயனகிய அவனது தழுவலைப் பெருதே வாடச் செய்த வருத்தம் தோன்றக் கூறியதாம். மறந்து அமைகலன்' என்ரு ள், அதனை யான் மறவேன் ஆதலின், நின் பொய் யானதாகிய இவ்வன்புத் தழுவலைக் கைவிடுக என்றனள். அவன், தன் குற்றத்தை உணர்ந்து பணிந்து வேண்ட, அவளும் தன் ஊடல் தீர்வாள் என்பது இயல்பாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/134&oldid=774128" இலிருந்து மீள்விக்கப்பட்டது