பக்கம்:நற்றிணை-2.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! so? நற்றினை தெளிவுரை தெளிவுரை : தோழி, நீதான் நெடுங்காலம் வாழ்வாயாக! நம் கர்தலர் நம்மாட்டு அருளில்லாதவரே ஆயினர்! மின்னல் பிளந்தபடியே இருளை நிறைத்து மேகங்கள். பரந்துள்ள வானத்திடத்தே, இடிகளும் முழக்கமிட்டபடி அதிர்கின்றன. வெம்மையான ஞாயிற்றை வெளியே தோன்ருதபடியாக மறைத்துக் கொண்டு நிறைந்த சூலையுடையவாயின கார்மேகங்கள்! அம் மேகங்கள் நெடியவும் பெரியவுமான குன்றுகளிடத்தே குறுகிய பல படலங்களாக இயங்குவனவாயின. இடையீடில்லாத பெரும் பெயலையும் அவை பெய்யத் தலைப்பட்டன. இத்தகையதான இரவின் நடுயாமத்தே, களிற்று யானையைப் பற்றிச் சுற்றிக் கொண்ட பெருஞ் சினத்தையுடைய மலைப்பாம்பானது, வெளிறே இல்லாதபடி முற்றவும் வயிரமேறிய மரத் தினையும் தன்னுடலாற் பிணித்து மிகவும் பற்றிப் புரட்டா நிற்கும். சந்தனமரங்கள் ஓங்கி வளர்ந்துள்ள இனிய மணம் கமழுகின்ற மலைப்பிளவினிடத்தே கொறுக்கச்சியின் நறிய பூக்கள் நீடி மலர்ந்துள்ள அத்தகைய பெரிய மலையிடத்துச் சிறுநெறியினைக் கடந்தும், அவர் வருதலை உடையர்! ஆதலானே, அவர் நம்பால் அருளிலர் கண்டாய்! சொற்பொருள் : வசிபு-பிளந்து எழுந்து. இருள் தூங்கு விசும்பு-இருளட்ர்ந்து கருத்திருக்கும் வானம். ஏறு-இடியேறு. வெஞ்சுட்ர்-வெம்மைய்ைச் செய்யும் சுடர். கமஞ்சூல்-நிறை சூல். நெடும் பெரும் குன்றம்-நெடிய பெரிய குன்றம். குறும் பல மறுகி-குறுகிய பலவாகப் படர்ந்து. தாவில் பெரும் பெயல்-குற்றமற்ற பெரும் பெயல். இடைவிடாத பெரு மழை. மாசுணம்-பாம்பு, களிறை அகப்படுத்திய பெருமலைப் பாம்பு. வெளிறில் காழ்மரம் - வெளிறேயின்றி முற்றவும் வயிரம் பாய்ந்த பெருமரம்; இதனைச் சந்தன மரமாகவும் கொள்ளலாம். போகிய-உயர்ந்து வளர்ந்த, எருவைகொறுக்கச்சி. விளக்கம்: அவர், தாம் வருகின்ற வழியிடையே அவருக்கு யாதாயினும் ஏதம் உண்டாதலை நினைந்து யாம் மிகவும் வருத்தமுறும்படி செய்பவராயினதால், அவர்க்கு நம்மீது அருள் இல்லை; இதனை விடுத்து, அவர் நம்மை வரைந்து வந்து மணந்து கொண்டு பிரியாது இன்பந் தருதலன்ருே அருண்மையாகும் என்று சொல்லி வரைவு கடாயதாகக் கொள்க, -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/136&oldid=774130" இலிருந்து மீள்விக்கப்பட்டது