பக்கம்:நற்றிணை-2.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

\ நற்றிணை தெளிவுரை 133 அவர்தாம் வரைந்து கொள்ளாதே, யாம் பெரிதும் கலக்கமடையுமாறு இரவு நேரத்தே இவ்வழியைக் கடந்து வருதலால், நம்மீது அருளில்லாதவர் ஆயினர். ஆயினும், நாம் இறந்து.ோதலைக் கருதினவராக நம் துயரைத் தீர்க்கும் கருத்தோடு வருதலால், அவர் எத்தகைய ஏதமு மற்றவராகி நெடிது வாழ்வாராக என்று கூறியதாக், இரண்டாவது துறைக்குப் பொருத்தி உரைகொள்க. இதனைக் கேட்டலுறும் தலைவன் தலைவிமாட்டுத் தானும் ஆராத காதலை உடையோனதலினலே, அவளை விரைந்து மணந்து கூடி வாழ்தலிலே மனஞ்செலுத்துபவன் ஆவான் என்பதாம். இதுவே, இப்படிச் சொல்வதன் பயனும் ஆகும். 262. தோள் அரும்பிய சுணங்கு! பாடியவர் : பெருந்தலைச் சாத்தனர். திணை: பாலை. துறை : தலைமகள் ஆற்ருக் குறிப்பறிந்து பிரிவிடை விலக்கியது. ((து.வி.) பொருளைத் தேடி வருதலைக் கருதித் தன்னைப் பிரிந்து போதலைத் தலைவன் உளங்கொண்டான் என்பதனைக் குறிப்பாலே அறிந்து, தலைவி பெரிதும் கவலையால் நலிவடை கின்றனள். அவளது நலிவைக் கண்டு மனங்கலங்கியவன், தன் நெஞ்சொடுங் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.) தண்புனக் கருவிளைக் கண்போன் மாமலர் ஆடுமயிற் பீலியின் வாடையொடு துயல்வர உறைமயக் குற்ற ஊர்துஞ்சு யாமத்து நடுங்குபிணி கலிய கல்லெழில் சாஅய்த் துணிகூர் மனத்தள் முனிபட ருழக்கும 5 பணத்தோள் அரும்பிய சுணங்கின் கணக்கால் குவளை காறும் கூந்தல், தேமொழி இவளின் தீர்ந்தும் ஆள்வினை வலிப்பப் பிரிவல்நெஞ் சென்னும் ஆயின் அரிதுமன் றம்ம இன்மைய திளிiே! 10 தெளிவுரை: தண்ணிய புனத்திடத்தே வளர்ந்துள்ள கருங்க்ாக்கணத்தின் கண்ணப் போன்ற கருமையான மல்ர்கள், வாடைக் காற்று வீசுதலாலே, கூத்தாட்டயரு கின்ற மயிலினது பீலியைப் போல அசைந்தாடியபடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/137&oldid=774131" இலிருந்து மீள்விக்கப்பட்டது