பக்கம்:நற்றிணை-2.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை - 135 வறுமையாலே வருகின்ற இளிவரவுதான் எத்துணைப் பொறுத் தற்கு அரிது, என்று அதனை நினைத்துச் சோர் கின்ருன். இதன் பயன், அவன் தன் செலவைக் கைவிட்டவகை இல்லத்தே தங்கி விடுபவனவன் என்பதாம். இன்பமும் பொருளுமாகிய இரு பெருந் தேவை களுக்கு நடுவே சிக்கி ஊசலாடுகின்ற இளமைப் பருவத் தின்ரின் உள்ளத்தை ஒவியப்படுத்திக் காட்டும் சிறந்த செய்யுள் இது. 263. பிறைவனப்பு இழந்த நுதல்: பாடியவர்: இளவெயினனர். திணை: நெய்தல். துறை : சிறைப்புறமாகத் தோழி தலைமகனை வரைவு கடாயது. | (து.வி.) தலைமகனைவன் ஒருசிறைப் புறமாக வந்திருப்பதை அறிந்த தோழி, அவனுக்குத் தலைவியை விரைய வந்து மணந்துகொள்ளல் வேண்டுமென்று அறி வுறுத்தக் கருதினவளாக, அவன் கேட்குமாறு, தலைவிக்குச் சொல்வதுபோல அமைந்த செய்யுள் இது.) பிறைவனப் பிழந்த நுதலும் யாழகின் இறைவரை நில்லா வளையும் மறையாது ஊரலர் தூற்றும் கெளவையும் நாணிட்டு உரையவற் குரையா மாயினும் இரைவேட்டுக் கடுஞ்சூல் வயவொடு கானலெய் தாது 5 கழனி ஒழிந்த கொடுவாய்ப் பேடைக்கு முட முதிர் காரை கடல்மீன் ஒய்யும் மெல்லம் புலம்பற் கண்டுகிலை செல்லாக் கரப்பவுங் கரப்பவும் கைம்மிக்கு, உரைத்த தோழி! உண்கண் நீரே. 10 தெளிவுரை : தோழி! பிறையைப்போன்ற தன் வனப்பை எல்லாம் இழந்துவிட்ட நினது நெற்றியையும், தங்குதற்கு உரியதான் இடத்திலேயே நில்லாதபடி கழன்ருேடும் நின் வளைகளையும், மறைத்தேனும் சுருதே எதிராக வந்தே ஊரவர் அலர்தாற்றும் பழியுரைகளையும், '*..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/139&oldid=774133" இலிருந்து மீள்விக்கப்பட்டது