பக்கம்:நற்றிணை-2.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 - நற்றிணை தெளிவுரை பெற்றுத் தோன்றும் கார்ப்பருவமும் வந்தது; அக் கார்ப் பருவத்திலே, அழகு விளங்குகின்ற தன் தோகையைப் பைய விரித்தபடியே ஆடலைத் தொடங்கும், நீலமணியைப் போல விளங்கும் கழுத்தைக்கொண்ட மயிலைப்போல, நினது பூச்சூட்டப் பெற்றிருக்கின்ற கூந்தலானது வீசுகின்ற காற்ருலே அசைந்தாட, முற்பட நீயும் செல்வாயாக! சொற்பொருள்: அளே-பாம்புப் புற்ருகிய வளை. செறியபதுங்கிக்கொள்ள. வலனேர்பு-வலமாக மேலெழுந்து. தளிமழை. காண்பு இன் காலை-காட்சிக்கு இனிதான பொழுது; இது கார்ப்பருவம், அணிகிளர் கலாவம்-அழகு சுடரிடுகின்ற தோகை. ஐது விரித்து - பைய விரித்து; வியக்கும்படி விரித்தும் ஆம். மணி-நீலமணி. உளர-அசைந்தாட. பொழுது எல்லின்று-ஞாயிறும் ஒளிகுன்றப் பொழுதும் சாய்ந்தது. இரும்பு-குறுங்காடு, தெண்மணி - தெளிவான ஓசையுடைய மணி. சிறுநல் ஊர்-சிறிய நல்ல ஊர். விளக்கம் : தலைவிக்கு மயிலையும் விரிந்து ஆடும் அவள் கூந்தலுக்குத் தோகையையும் உவமித்தனர். கொடிச்சி கூந்தல் போலத் தோகை அஞ்சிறை விரிக்கும் என ஐங்குறு நூற்றும் (ஐங். 300), விரைவளர் கூந்தல் வரைவளி புளரக் கலாவ மஞ்ஞையின் காண்வர இயலி' எனப் புறநானூற்றும் (புறம். 133) வருதல் காண்க. தன்னுரர் மிகமிக அணிமைக் கண்ணேயே உளது என்பான் ஆபூணும் மணியின் ஒலியைக் கேட்குமாறு உரைத்தான். விரைந்து செல்வாயாக எனச் சொல்வான் கூந்தல் வளியுளர ஏகுதி என்கின்ருன். அப்படி ஏகுகின்ற காட்சியைக் கண்டு தானும் இன்புறுதலைக் கூறுவான், அவளது எழிலை வியந்தாகை, 'அணிகிளர் கலாவம் ஐது விரித்து இயலும் மணிபுரை எருத்தின் மஞ்ஞை போல. ஏகுதி என்கின்ருன். இதனைக் கேட்ட அவளும், தன் அயாவொழிந்தாளாக, மனத்தே ஊக்கமும், தன் காதலனது ஊ ைர ச் சென்றடையும் விருப்பமும் மேலெழ, விரைந்து நடத்தலைச் செய்வாள் என்பது இப்படிச் சொல்வதன் பயனகும். கார்ப்பருவம் கூறியது உடனுறைந்து மகிழ்தற்கு உரிய பருவம் அதுவாதலால், ஊர் அணிமைத்தாதலின் அச்ச மின்றிச் செல்லலாம் என்பதுமாம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/142&oldid=774137" இலிருந்து மீள்விக்கப்பட்டது