பக்கம்:நற்றிணை-2.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 139 265. கலாவத்தன்ன ஒலிமென் கூந்தல்: பாடியவர்: பரணர். திணை: குறிஞ்சி. துறை: பின்னின்ற தலைமகன் நெஞ்சிற்கு உரைத்தது. - ( (து-வி.) தலைவியைத் தோழியின் ஒத்துழைப்போடு அடைதலை விரும்பினன் தலைவன். அவள், அவன் நிலைகண்டு, ‘இவன் யாதோவொரு குறையுடையவன் போலும்!’ என உய்த்து உணருவதற்கு முன்பே, தலைவனின் ஏக்கம் மிகுதியா கிறது. அவன் தன் நெஞ்சுக்குக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.) இறுகுழல் மேய்ந்த அறுகோட்டு முற்றல் அள்ள லாடிய புள்ளி வரிக்கலை விளை யம்பின் வில்லோர் பெருமகன் பூந்தோள் யாப்பின் மிகுநிலி காக்கும் 'பாரத் தன்ன வார மார்பின் - 5 சிறுகோற் சென்னி ஆரேற் றன்ன மாரி வண்மகிழ் ஓரி கொல்லிக் கலிமயிற் கலாவத் தன்ன விவள் ஒலிமென் கூந்தல் நம்வயி ஞனே. தெளிவுரை : காய்ந்துபோன புல்லை மேய்ந்ததேைல உதிர்ந்த முதிர்ந்த கொம்பினை உடையதும், புள்ளியையும் வரியையும் உடையதுமான கலைமாணுனது, சேற்றிலே கிடந்து புரண்டு தன் வெம்மையைத் தீர்த்துக்கொள்ளும். அத்தகைய,ஒலியோடு செலுத்தப்படும் அம்பினைக் கொண்ட வரான வில்வீரர்களின் தலைவனும், பொலிவு பொருந்திய தன் தோளிலே கவசம் பூட்டியிருப்போனுமாகிய மிஞரிலி என்பவன், பேணிக் காத்துவரும் பாரம் என்னும் மலைநாட் டுரைப் போன்றதும், ஆத்திமாலை சூடிய மார்பினனை சோழன், தன் கையிற் சிறிதான செங்கோலைக் கொண்டபடி சிற்றரசரை வரவேற் கும், ஆரேற்று' என்னும் அருளைப் போன்றதும், மாரிபோல வழங்கும் கொடை மிகுதியும் கள்ளுணவு முடைய ஓரி என்பானின் கொல்லி மலையிடத்துள்ள செருக்கிய மயிலைப் போன்றதுமான, -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/143&oldid=774138" இலிருந்து மீள்விக்கப்பட்டது