பக்கம்:நற்றிணை-2.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலாவத்தன்ன இவள், ஒலிமென் கூந்தல் உரியவாம் நினக்கே என வரும் குறுந்தொகையும் இதனை விளக்கும் (குறுந். 225). கணவர்ை இழந்த மகளிர் கூந்தலை மழித்து விடுவது இயல்பான பண்ட்ைய மரபு. இதன்ைக் க்ொய்ம் மழித் தலையொடு கைம்மையுற' என்வரும் புறப்பாட்டடி யாலும் அறியலாம் (புறம். 26.). - 266. குறுங்காற் குரவின் குவியிணர்! பாடியவர் : கச்சிப்பேட்டு இளந்தச்சனர். திணை: முல்லை. துறை : தலைமகனைச் செலவுடன் பட்டது (1): கடிநகர் வரைப்பிற். கண்டு மகிழ்ந்த தலைமக்ற்குத் தோழி 'நும்மாலே யாயிற்று என்று சொல்லியதும் ஆம் (2). ((து-வி.) தலைமகன் வினை.வயிற் பிரியக் கருதியதறிந்த தோழி, அவனை நெருங்கி, தாம் அவனது செலவுக்கு உடன் பட்டு ஆற்றியிருப்புதாகக் கூறி, அவனைக் கவலையற்றுச் சென்று வருமாறு உறுதிம்ொழி கூறுவதாக அமைந்த செய்யுள் இது (1); தலைம்க்ன், வரைவிடைப் பிரிந்து சென்ற வன், தலைவியை மணம்வேட்டுச் சான்ருேருடன் அவள் இல்லத்துக்கு வந்தபோது, தோழி, இத் திருமணமானது நுமது முயற்சியாலேயே நடந்தது’ என அவனைப் பாராட்டு வாளாக மகிழ்ந்து கூறுவதாக அமைந்த செய்யுளும் இது.) கொல்லக் கோவலர் குறும்புனஞ் சேர்ந்த குறுங்காற் குரவின் குவியிணர் வான்பூ ஆடுடை இடைமகன் சூடப் பூக்கும் அகலு லாங்கண் சீறு ரேமே . அதுவே சாலுவ காமம் அன்றியும் 5 எம்விட் டகறிர் ஆயின் கொன்னென்று. கூறுவல் வாழியர் ஐய வேறுபட்டு இரீஇயகரலை இரியின் பெரிய அல்லவோ பெரியவர் கிலேயே தெளிவுரை: ஐயனே! நீவிர் வாழ்வீராக! புன்செய்க் காட்டிடத்தே வாழ்பவர் ஆப் பயன் கொள்வாரான கோவலர். அவருக் குரித்தான குறுகிய புனங்களுக்கு அயலாகக் குறுகிய அடிமரத்தையுடைய குரா மரங்கள் குவிந்த கொத்தாகிய வெண்பூக்களைப் பூத்திருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/145&oldid=774140" இலிருந்து மீள்விக்கப்பட்டது