பக்கம்:நற்றிணை-2.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 143 குடிப்பெருமைக்குக் குறை ஏற்படாவண்ணம் நடந்து கொள்வாள் என்னும் கருத்துப்படப் பொருளைக் கூட்டி உரைத்துக் கொள்க. - 267. வந்துகின்றவயமான் தோன்றல்! பாடியவர் : கபிலர். திணை: நெய்தல். துறை : தோழி, காப்புக் கைம்மிக்குக் காமம் பெருகிய காலத்துச் சிறைப் புறமாகச் சொல்லியது (1) வரைவு கடாயதுமாம் (2). [ (து வி.). களவுறவாலே தலைவியின் மேனியிடத்தே தோன்றிய மாற்றங்களைக் கண்ட தாய், அவளைத் தெய்வம் அணங்கிற்று எனக் கருதினள். அவளை இல்லத்தில் காவ லிட்டுச் சிறையும் வைத்துப் பேணினள். அவ்வமயம் தலைவியது காமநோய் மிகுதலைக் கண்டு வருந்தின தோழி, ஒருநாள், தலைவன் ஒருசார் வந்து நிற்பதைக் கண்டவள், அவன் கேட்டு உணருமாறு, அவனைக் காணுதாள் போன்று, தனக்குள் சொல்லிக் கொள்வதுபோல அமைந்த செய்யுள் இது. (1); இவ்வாறு சொல்லி வரைவு கடாயதும் ஆகும்.(2)] நொச்சி மாவரும் பன்ன கண்ண எக்கர் ஞெண்டி னிருங்கிளைத் தொழுத இலங்கெயிற் றேனர் இன்னகை மகளிர் உணங்குதினை துழவும் கைபோல் ஞாழல் மணங்கமழ் கறுவி வரிக்குந் துறைவன் 5 தன்னெடு புணர்ந்த வின்னமர் கானல் தனியே வருதல் நனிபுலம் புடைத்தென வாரேல் மன்யான் வந்தனென் தெய்ய சிறுகா வொண்மணித் தெள்ளிசை கடுப்ப இனமீன் ஆர்கை யீண்டுபுள் ளொலிக்குரல் 10 இவைமகன் என்ன வளவை வயமான்.தோன்றல் வந்துகின்றனனே! தெளிவுரை : நொச்சியது கரிய அரும்பினைப் போன்ற கண்களையுடையன ஞெண்டுகள். மணலிடத்தேயிருக்கும் அத்தகைய ஞெண்டினது பெரிதான சுற்றத்தோடுங்கூடிய கூட்டமானது, ஞாழலின் மணங்கமழும் உதிர்ந்த மலர் களைத் தம் கால்களாலே வரிவரியாக வரித்துக் கோலஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/147&oldid=774142" இலிருந்து மீள்விக்கப்பட்டது