பக்கம்:நற்றிணை-2.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144, நற்றினை தெளிவுரை செய்தபடி யிருக்கும். அதுதான், விளங்குகின்ற பற்கள் ஒளிசெய்கின்ற அழகிய இனிய நகையினையுடைய, குன்றத்து மகளிர்கள் காயவைத்திருக்கும் தினயைத் தம் கை விரல் களாலே துழாவி விடுவதனைப் போன்றும் தோற்றும், அத்தகைய துறைக்கு உரியவன் தலைவன்! அவைேடு தலைவி யைக் கூட்டுவித்த, விருப்பத்தையுடைய கானற் சோலை யிடத்தே, தலைவியில்லாதே, யான் மட்டும் தனியே வருதல் மிகவும் வருத்தம் உடையதென்று கருதிய யானும், அவ் விடத்திற்குப் பெரும்பாலும் வாராதிருந்தேன். ஆயின், ஒருநாள் அவ்விடத்துக்கு யானும் வந்தேன். அவ் வேளை யிலே, சிறிய நாவையுடைய ஒள்ளிய மணியினது தெளிந்த ஒசையைப் போல ஒசை எழுப்பியபடியே, மீனினத்தைத் தின்னுகின்றதற்கு வந்து கூடுகின்ற புட்களின் ஒலிக்குரலைக் கேட்டேன். கேட்டவள், இவ்வோசை நம் தலைமகனது தேரிற் கட்டியுள்ள மணியோசையினைப் போன்றது என்று சொல்லுவதற்கு நினைந்த அளவிலேயே, வலிமிக்க குதிரை கள் பூட்டிய தேரைச் செலுத்தியபடியே அவனும் வந்து நின்றனன். ஆனால், இனி அவர்கள் கூட்டந்தான் இவ் விடத்தே நேர்தல் வாயாது! - சொற்பொருள்: மா.அரும்பு - கருமையான பூவரும்பு.' எக்கர் - மணல்மேடு. இருங்கிளைத் தொழுதி - பெரிய சுற்ற மாகிய கூட்டம். துழவும் - துழாவி விடும்; இது தினை நிரலே போலக் காயும் பொருட்டாக மகளிர் செய்யும் வினை. ஞாழல் - சுரபுன்னை. வரிக்கும் - கோடிட்டுச் செல்லும். அமர் கானல் - விருப்பமுடைய கானற் சோலை; விருப்பம் உடையதானது அதன்கண் தலைவனும் தலைவியும் களவிற் கூடி இன்புற்றிருந்த காரணத்தால். நனி புலம்பு - மிகுதி யான வருத்தம்; இது பழைய களிப்பையும் தற்காலத்துப் பிரிவையும் நினைதலால் உண்டாவது. வயமான் - வலிய குதிரைகள். விளக்கம் : புள்ளொலி கேட்டதனை மணியொலி என மயங்கினுள் என்ருலும், அவன் தேர் வந்ததும் உண்மை யாதலின், இது படைத்துக் கூறியதெனக் கொள்க. அல்லது, அவன் தேர்வரவால் கலைந்து மேலெழுந்த புட்குரல் எனவும் கருதுக. இற்செறிப்பாலும் காப்பு மிகுதியாலும் களவுக்கூட்டம் இனிமேல் வாயாது; தலைவியின் காமநோய் பெருகுதலால் அவள் இறந்து படுதலும் நிகழக் கூடும்; எனவே இனி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/148&oldid=774143" இலிருந்து மீள்விக்கப்பட்டது