பக்கம்:நற்றிணை-2.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 நற்றின தெளிவுரை கருதிற்றிலர். சிறிய பலவாகிய குன்றங்களைக் கடந்து செல்வாரும் ஆயினர். அவர் உள்ளத்தே நினைபவற்றை அறியவல்லார்தாம் யார்? அறிந்தோரைப்போல நீவிரும் வந்து வாயில் வேண்டுவதுதான் எதற்காகவோ? சொற்பொருள் : குரும்பை மணிப்பூண்-குரும்பைபோலச் செய்த மணிகள் கோத்த அரையிற் கட்டும் கிண்கிணி. கட்கின் மார்பு-காண்டற்கு இனிமை தருவதாகிய மார்பு. ஊர்பு இழிதல்-ஏறியும் இறங்கியும் விளையாட்டயர்தல். மாண்நகை-மாட்சி கொண்ட சிரிப்பு; இது புதல்வனின் விளையாட்டைக் கண்ட இன்பத்தால் தோன்றியது. வள்ளிவள்ளிக்கொடி, இறப்போர்-கடந்து செல்வோர். விளக்கம் : காதலனது மார்பிலே ஊர்ந்து விளையாடும் புதல்வனின் விளையாட்டுச் செயலைக் கண்ட தலைவி, அவன் மார்பினைக் கிண்கிணி ஊறுபடுத்தும் எனக் கலங்கியவ ளாய்த், தலைவனைப் பெருமரவள்ளியிற் பிணித்துக் கொண் டனள் என்க. அவரது அத்தகைய காதற்பெருக்கையும், புதல்வனது / அத்தகைய இனிய விளையாட்டையுமே மறந்து பிரிந்து சென்றவர், இனி யாதுதான் செய்தற்குத் துணியார்? அவர் பேச்சை பாமும் இனி ஒருபோதும் நம்புதற்கில்லோம் எனபதாம். : - காதலனது முயக்கத்து நினைவிேைலயே அவன் பிரிவை மறந்து யாமும் ஆற்றியிருப்போம் என்று வாயில் மறுத்ததும் ஆம். தலைவனலே விரும்பப்பட்ட பரத்தையர் அவன் குடிக்கு விளக்கஞ் செய்யும் புதல்வரைப் பெற்றுத்தரும் உரிமை இல்லாதவர் என்பதைக் குறிப்பாகக் கூறித் தமது கற்பற உயர் மாண்பினை வாயிலர்க்கு உரைத்ததும் ஆம். இதல்ை, தலைவியின் காதற்பெருக்கையும் மறந்து பரத்தையர் உறவினை நாடிச்சென்ற தளர்ச்சியுடையவன் தலைவன் எள்பதும், அவனது அச் செயலால் தலைவி பெரிதும் வெகுளி உடையவளாயினுள் என்பதும் விளங்கும். இத்தகு உரிமையும் துணிவும் கொண்டிருந்தனர் பண்டைத் தமிழகத்துத் தலைவியர் என்பதும் அறிதல் வேண்டும். புதல்வன் தலைவனது மார்பணியைச் சிதைக்க, அதுகண்டு தலைவி மனம் வருந்துவாள் என்பது அவளது காதற் பாசத்தில்ை ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/152&oldid=774148" இலிருந்து மீள்விக்கப்பட்டது