பக்கம்:நற்றிணை-2.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 151 கும், வண்டுபடு நாற்றத்து இருள்புரை கூந்தல் பரத்தை யருக்கும், உருண்டு வீழ்ந்த தரை தோழிக்கும் உவமை யாகக் கொள்க. தாழையின் பூவை மகளிர் தம் சடையிலே சேர்த்து முடித்துக் கொண்டு ஒப்பனை செய்து கொள்ளும்போது, அந்தச் சடையினது தோற்றம் கூடுபோலத் தோன்றும்; ஆதலின் அதனைச் சூடியிருந்த தலைவியின் கூந்தற் சிறப்பைத் தாழைக் குடம்பை என்றனர். 'வண்டுபடு நாற்றத்து இருள்புரை கூந்தல்’ என்றது, வண்டினங்களைத் தன் நறுநாற்றத்தால் தன்யால் ஈர்க்கும் மலர்களைச் சூடிய இருள்போலும் கூந்தல் என்க. இதனால், தலைவன் தன் குற்றத்தை உணர்ந்து நாணத், தன் முன்னே தலைவனைப் பழித்தலைப் பொருதவளான தலைவியும், தோழியைக் கடிந்து, அவ்னை ஏற்றுக்கொள்வதற்கு முற்படுவாள் என்க. 271. தாவின்று கழிக கூற்றே!

  • பாடியவர் : ...... திணை : பாலை. துறை: மனை மருண்டு

சொல்லியது. i [ (து. வி.) தன் மகள், தான் விரும்பிய காதலனுடனே, தன் வீட்டினின்றும் நீங்கிச் சென்றுவிட்டனளாக, அதனல் எழுந்த பழியுரைகளைக் கேட்டுப் பொறுக்கவியலாதவளா யினுள் அவள் தாய். அவள், தன் மனையிடத்தே இருக்க முடியாதபடி மனம் மயங்கியவளாகப் புலம்பிக் கூறுவது போன்று அமைந்த செய்யுள் இது.) இரும்புனிற் றெருமைப் பெருஞ்செவிக் குழவி பைந்தா தெருவின் வைகுதுயில் மடியும் செழுந்தண் மனையொடு எம்மிவண் ஒழியச் செல்பெருங் காளை பொய்ம்மருண்டு சேய்நாட்டுச் சுவைக்காய் நெல்லிப் போக்கரும் பொங்கர் 5 வீழ்கடைத் திரள்காய் ஒருங்குடன் தின்று வீசுனச் சிறுநீர் குடியினள் கழிந்த குவளை யுண்கண் என்மகளோ ரன்ன செய்போழ் வெட்டிய பொய்த லாயம் மாலைவிரி நிலவிற் பெயர்புறங் காண்டற்கு 10 மாயிருந் தாழி கவிப்பத் தாவின்று கழிகளிற் கொள்ளாக் கூற்றே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/155&oldid=774151" இலிருந்து மீள்விக்கப்பட்டது