பக்கம்:நற்றிணை-2.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 நற்றிணை தெளிவுரை - தெளிவுரை : கரிய எருமையினது அணித்தாக ஈனப் பெற்ற பெரிய செவியையுடைய கன்ருனது, பசிய பூந்தா துகள் உதிர்ந்து எருவாகக் கிடத்தலையுடைய தொழுவினி டத்தே, தங்கப் பெற்ற துயிலை மேற்கொண்டு உறங்கா நிற்கும், செழுமையும் தண்மையும் கொண்டது இம் மனை யாகும். இதனேடு, எம்மையும் இங்கே தனித் திருக்கவிட்டு, எம் மகளும், தன்ைேடு வருகின்ற பெரிய காளையாவானின் பொய்ச்சொற்களாலே மயங்கியவளாக, நெடுந்துரத்தே யுள்ள அவன் நாட்டை நோக்கியும் செல்வாளாயினள். சுவையான காய்களையுடைய நெல்லி மரங்கள் செறிவுற்றுப் ப்ோவாரை மேற்போகாதபடி தடுக்கின்ற நெல்லிமரச் சோலையினுள்ளே, தரையிலே வீழ்ந்து கிடந்த கடை திரண்ட காய்களை ஒருசேரத்தின்று, வறண்ட சுனையிடத்தே யுள்ள மிகச்சிறிதளவான நீரையும் குடித்தவளாக, அவளும் போவாளோ! குவளை மலரைப் போலத் தோன்றும் மையுண்ட கண்களை உடையவளான அத்தகைய எம் மகள் தான்- كم சிவந்த பனங்குருத்தை வெட்டிப் பதப்படுமாறு பணியிற் போடுதலாகிய மாலைப்பொழுதின் பின்னே, நிலவு விரிகின்றதான இரவுப்பொழுதிலே, அவளைத் தேடிப் பின் சென்றவர் அவளே மீட்டுக் கொணர, அவள் மனைக்கு மீண்டுவருகின்ற அந்தத் தோற்றுவாடிய நிலையைக் காணற் கும், என்னே விதி விதித்துவிட்டதே! அதற்கு முன்பேயே என்னைப் பெரிய தாழியிலேயிட்டுக் கவிக்கும்படியாக, என் உயிரைக் கொண்டு போகாத கூற்றமானது, தானும் தன் வலியழிந்ததாய்த், தன்னையே தாழியிலிட்டுப் புதைக்கும்படி யாக இறந்து ஒழியக் கடவதாகுக! - சொற்பொருள் : வைகுதுயில் - தங்கப் பெற்ற உறக்கம். செழுந்தண் மனை - செழுமையும், மரச்செறிவால் தண்மை யுங் கொண்டதான மனே. பெருங்காளை - பெரிய காளை; பெரிய என்றது எள்வி. ற் குறிப்பு. பொய் மருண்டு - பொய் யுரைகளாலே மயங்கி, பொய் என்றது அவன் தன் மகட்குச் சொல்லிய உறுதிமொழிகளே; அது வாயாமற்படி அவளைத் தன் விட்டாா மீட்டுக் கொணர்வர் என்பதல்ை இப்படிக் கூறினள். போக்ககும் பொங்கர் - டோக்கைத் தடுக்கும் ச்ோலை; போதற்கு அரிதாயது, நேல்லிக் காய்கள் காலை உறுத்தலாலும் நின்னத் துண்டுதலாலும், வீகனை வறண்ட சுனை. புறங்காண்டல் - ண்ணம் நிறைவிேருமல் தோல்வி யுற்று 1ண்டதைக் காணுதல்; இதஞல், அவள் கருத்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/156&oldid=774152" இலிருந்து மீள்விக்கப்பட்டது