பக்கம்:நற்றிணை-2.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 154 நற்றிணை தெளிவுர்ை கடலம் காக்கைச் செவ்வாய்ச் சேவல் படிவ மகளிர் கொடிகொய் தழித்த பொம்மல் அடும்பின் வெண்மணல் ஒருசிறைக் கடுஞ்சூல் வதிந்த காழர் மேடைக்கு இருஞ்சேற் றயிரை தேரிய தெண்கழிப் 5 பூவுடைக் குட்டங் துழவுக் துறைவன் கல்கா மையின் நசைபழுதாகப் பெருங்கை யற்றவென் சிறுமை யலர்வாய் அம்பன் மூதூர் அலர்தந்து நோயா கின்றது நோயினும் பெரிதே' 10 . தெளிவுரை : நோன்பு மேற்கொண்டவரான மகளிர்கள் கொடிகளைக் கொய்து அழித்து இடம்செய்துள்ள நெருங்கிய அடும்பின் கொடிகளைக் கொண்டதான வெண்மணற் பாங்கின் ஒருபக்கத்தே, நிரம்பிய சூலுடனே சென்று தங்கி யிருந்தது, கடற்காக்கைப்பேடை ஒன்று. தன்னலே விரும்பப் படுகின்ற அந்தத் தன் டேடைக்கு உணவாகக் கரிய சேற்றி னிடத்தே உள்ளதான அயிரைமீனத் தேர்ந்தெடுத்துக் கொணர விரும்பியது, கடலியங்கு நீர்க்காக்கையுள் சிவந்த வாயினதால் அதன் சேவல், அதுதான் அதன்பொருட்டாகத் தெளிந்த நீரையுடைய கழியிடத்தேயுள்ள பூக்களையுடைய ஆழமான இடத்தினைச் சென்று துழாவியபடி இருக்கும். இத் தன்மைத்தான கடற்றுறைக்கு உரியவன் நம் தலைவன். அவன் நமக்குத் தலையளி செய்யாமையினலே நாம் அவ னேடுங் கூடியிருந்து இல்லறம் பேணுவோம் என்னும் நம் முடைய விருப்பமும், பழுதாகி விட்டது. அதேைல் பெரிதும் செயலிழந்து போயின என் காமநோயாகிய சிறுமைப் பாடானது பழிகூறுதலே இயல்பாகவுடைய அலருரைக்கும் பெண்டிர் வாழும் எம்மூதூரிடத்தே அலரையும் கொண்டு தந்தது. அதுதான், அவரைப் பிரிதலாலுண்டாகிய நோயினுங் காட்டில் பெரிதும் நோய் செய்வதாகின்றது, தோழி! - - சொற்பொருள் : கடலம் காக்கை-கடலைச் சார்ந்து வாழ் வதாகிய கடற் காக்கை. படிவமகளிர்-நோன்பு மேற் கொண்ட மகளிர்; பொம்மல்-செறிவு. சி ைற-ப க் க ம். ' கடுஞ்சூல்-நிறைசூல்; முதற்குலும்ஆம். வதிந்த-தங்கிய;தங்கு தல் தன்ற்ை பறந்து சென்று இரைதேட வியலாத தளர்ச்சி மிகுதியினல், தெண்கழி-மேலே தெளிந்த நீரைக் கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/158&oldid=774154" இலிருந்து மீள்விக்கப்பட்டது