பக்கம்:நற்றிணை-2.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- s z - . • * * நற்றிணை தெளிவுரை 155 கழிப்பகுதி. பூவுடைக்குட்டம்-நீர்ப்பூக்களை உடையதான ஆழமான இடம். துழவும்-துழாவித்தேடும். நசை-விருப்பம்; இஃது இல்லுறை மனைவியாக அமைந்து அறம் பேணும் வாழ்க்கையிலே கொண்ட விருப்பம். பெருங்கையற்றபெரிதும் செயலழிந்த. சிறுமை-களவுறவால் மேனியின் வண்ணம் மாறிச் சிறுமையுற்ற தன்மை. விளக்கம் : படிவ மகளிர் கொடி கொய்து அழித்த பொம்மல் அடும்பின்வெண்மணல் ஒருசிறை என்றத்ஞல், அந்நாளைய மகளிர் தடல் தெய்வத்தை வேட்டு நோன்பு பூண்டு, அதனைக் கழிக்கும் நாளிலே பொங்கலிட்டுப் பூசனை செய்வதற்கு வசதியாகச் செய்யப்பெற்ற வெண்மணல் மட்டின் ஒரு பக்கம் என்றும் கொள்க. மணந்து இல்லற மாற்றும் ப்ெருமையை விரும்பியவள், அதுதான் நேர்ாமை யின் நொந்து வாடி நலிவுற்று, அதனல் ஊரவர் பழிதுாற்றச் சிறும்ையும் எய்தின்ஸ் என்ப்த்ாம். இதனைக் கேட்ட்லுறும் தலைவன், அதுதான் தன்னலே உண்டாயது என்பது உணர்ந் தாய்ை, விரைவில் அவளை மணக்கக் கருதுவான் என்பதுமாம். காக்கைப் பேடைக்குச் சேவல் அன்போடு செய்யும் அது தானும், அவர் நம் மாட்டுச் செய்யக் கருதிலரே என்று நினைந்து நொந்ததுமாம். உள்ளுறை : காக்கைச் சேவலானது கடுஞ்சூலோடு வதிந்த தன் பேடைக்கு அயிரை மீனைத் தேடும் என்றது அவ்வாற்ே தலைவனும் பொருளிட்டி வ்ந்து ப்ெற் முேருக்கு அளித்துத், தன்னை மணந்து இன்புறுத்தல் வேண் டும் என்றதாம். - கடுஞ்சூலோடு வெண்மணல் ஒருசிறை வ தி யு ம் பேடைக்கு அங்குள்ள அடும்பு பயன்படாமை போலத்,தான் பிறந்த இல்லிடத்தே வாழும் தலைவிக்கு, அங்குள்ள வளன் எல்லாம் பயன்தருவதின்று; தலைவனின் தலையளியே இன்பந் தருவது, பயன்தருவது என்றதுமாம். "படிவமகளிர் என்றது தாமும் அவ்வாறே நோன்பு பூண்டு தெய்வத்தைத் தம் காதலனேடு கடிமணம் புணர்க்கு மாறு செய்கவென வேட்டதனைக் குறிப்பால் உணர்த்தியது மாம். அன்றிப் பிரிவுத் துயரால் வருந்தி உண்ணுமையும் ஒப்பனைசெய்யாமையும் மேற்கொண்டதனல், படிவமகளிர்’ போலத் தோன்றியத்லுைம் ஆம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/159&oldid=774155" இலிருந்து மீள்விக்கப்பட்டது