பக்கம்:நற்றிணை-2.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 / நற்றிணை தெளிவரை உள்ளுறை : நீர் உண்ணும் அண்ணல் யானை தலைவகை வும், அது உண்ணும் சுனை தலைவியது குடியாகவும், நீர் தலைவி யாகவும், நீலம் தண்கமழ் சிறத்தல் அவளைப் பெற்ற பெற் 醬 பிறரும் மகிழ்தலாகவும் உள்ளுறை. பொருள் & fᎢ 6fᎢö , - 274. வருதியோ பொம்மல் ஓதி! பாடியவர்: காவன்முல்லைப் பூதனர். திணை : பாலை. துறை : தோழி, பருவம் மாறுபட்டது என்றது. (து.வி.) தலைவன் தலைவியைப் பிரிந்து சென்ற காலத் திலே, அவன் கோடையது வெம்மையால் வழியிடையே துன்பம் அடைதலும் கூடும்’ என்று எண்ணி வருந்துகின்ருள். அவளது வருத்தத்தைப் போக்கக் கருதிய தோழி, அவ் விடத்து மழைக்காலம் ஆயிற்றுக் காண்’ என்று கூறுவதாக அமைந்த செய்யுள் இது.) 'நெடுவான் மின்னிக் குறுந்துளி தலைஇப் படுமழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து . உழைமான் அம்பிணை தீண்டலின் இழைமகள் பொன்செய் காசின் ஒண்பழந் தாஅம் குமிழ்தலை மயங்கிய குறும்பல் அத்தம் 5 எம்மொடு வருதியோ பொம்மல் ஓதி'எனக் - கூறின்றும் உடையரோ மற்றே வேறுபட்டு இரும்புலி வழங்கும் சோலை பெருங்கல் வைப்பின் சுரன்இறந் தோரே. தெளிவுரை : தம்முள்ளே மாறுபட்டவான பெரிய புலிகள் திரிந்து கொண்டிருக்கும் சோலைகளை உடையதான, பெரிய மலைநாட்டைச் சார்ந்த நிலமாகிய சுரத்தைக் கடந்து செல்பவர் நம் காதலர். அவருக்கு ஏதம் ஏதும் உளதாமோ என நீயும் வருந்துவாய். ஆயின், நெடிய வானத்திடத்தே மேகங்கள் மின்னலிட்டுச் சிறு சிறு துளிகளையும் பெய்யத் தொடங்கிப் பெருமழையாகவும் பொழிந்ததாகிய, பிளப்புக்களையுடைய குன்றத்திடத்தே வாழ்கின்ற உழையாகிய பெண்மானின் அழகிய உட லானது தீண்டுதலாலே, இழையணிந்தாளாகிய பெண் ஒருத்தியது பொன்ற்ை செய்யப்பெற்ற காசினப் போன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/162&oldid=774159" இலிருந்து மீள்விக்கப்பட்டது