பக்கம்:நற்றிணை-2.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 159 வாகிய ஒள்ளிய பழங்கள் உதிருகின்ற, குமிழ மரங்கள் நிரம்பியிருக்கும் குறுகிய பல விழிகளைக் கொண்டதான சுரநெறியிலே, அடர்ந்த கூந்தலை உடையாளே! நீயும் எம் மோடும் வருகின்ருயோ? என்று அவர் சொல்லிய சொற் களையும் உடையர்காண்! ஆதலின், அங்கு அவர் வேனிலால் வெம்மையுறுவதும் இலரென்று தெளிவாயாக. சொற்பொருள் : நெடுவான் - நெடிய வானம். வான். மேகமும் ஆம். குறுந்துளி குறுகிய சிறு துளி. படுமழை . பெருமழை. பகுவாய்க் குன்றம் - பிளப்புக்களைக் கொண்ட குன்றம். உழைமான் அம் பிணை - உழையாகிய மானின் அழகிய பிணை. பிணை - பெண் மான். இழை மகள் - கல னணிந்த இளமகள். பொன் செய் காசு. பொற்காசு என் றும் வழங்குவர். குமிழ்-குமிழ மரம். தலைமயங்கல்-நிரம்பிச் செறிவோடிருத்தல்; பிற மரங்களோடு கலந்திருத்தலும் ஆம். குறும்பல் அத்தம் குறுகலான பலவாகிய வழிகள். பொம்மல் ஒதி - அடர்ந்த, கூந்தல்; அதனை உடையாளான தலைமகளைத் குறித்தது. வேறுபட்டு - மாறுபட்டு: இரும்புலி. பெரிய புலிகள். விளக்கம் : தலைவன் செல்லும் வழியிடையிலே அவன் துன்புறுதல் கூடும் 66Tಫಿ கவலையுற்ற தலைவிக்கு, அவன் பிரிந்த காலத்துச் சொன்ன சொற்களை நினைவுபடுத்தி, இவ்வாறு தேறுதல் உரைக்கின்ருள் தோழி. எம்மொடு” வருதியோ?" என அவன் அழைத்ததை நினைவுபடுத்தியது, அதுகாலை அதுதான் மகளிர்க்க மரபன்று’ எனக் கூறி மறுத்துத் தான் ஆற்றியிருப்பதாகக் கூறிய தலைவியின் சொற்களை நினைவுபடுத்துதற்கும் ஆம். இவ்வாறு கணவனேடு மகளிர் உடன்செல்லலையும் கோவலனேடு சென்ற கண்ணகி கதையால் அறியலாம். இனிச் செல்லற்கும் எளிது பொருளும் எளிதாகக் கிடைப்பது, எனவே நீயும் உடன் வருகின்ருயோ?” என்று அவன் அழைத்ததாகவும் கொள்ள லாம். | . . . இறைச்சி : 'மான்பிணை சென்று தீண்டலும் மரத்திற் பழுத்துக் கனிந்திருந்த குமிழின் பழங்கள் பொற்காசு போல உதிரும்’ என்றது. அவ்வாறே தலைவன் சென்று பொருளினை ஈட்டத் தொடங்கியதும், பொருளும் விரைவில் கிடைக்கும் என்க. ப்படி வந்து கைகூடுவதாகலின், அவன் ஆதைேடும் விரைவிலே மீண்டு வருவான் எனவும் கூறித் தலைவியைத் தேற்றுகின்றனளாகக் கொள்க, | 1 . | “r - |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/163&oldid=774160" இலிருந்து மீள்விக்கப்பட்டது