பக்கம்:நற்றிணை-2.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீற்றிணை தெளிவுரை 165 பீர்க்கின் பூக்களிலே ஊதித் தேனைப் பருகின! அதற்கு வேறுபட்டத்ாக நறுமணம் இல்லாமையிற்ை போலும், என்பாற் படர்ந்துள்ள் பசலையிட்த்தும் வந்து ஊதியைல்லை. நின் சிறிய குறிய பேட்டினுக்கு அன்புடையையாய் விரை வுடனே ஒடிப்போய் அதன் நெஞ்சம் நெகிழுமாறு அதற்குத் தலையளி செய்ததன் பயனே இஃதெல்லாம்! என் காதலரோ என்பால் அன்பில்லாதவராயினர். என்னைப் பிரிவினல் இவ்வாறு வருந்தவிட்டு, வெம்மை கொண்ட மலையிடத் துள்ள கடத்தற்கரிய சுரநெறியையும் கடந்து சென் றுள்ளார். அவண் சென்று, இவ்விடத்தே என்பால் அவரும் வருமாறு, என் துயர நிலையை, அவருக்கு நீதான் உரைக்க மாட்டாயோ ! கருத்து : நீதான் உரைக்க மாட்டாயாதலின், இனிச் சாவு ஒன்றே எனக்கு எஞ்சியது என்பதாம். சொற்பொருள் கொடியை - கொடுமை உடை ைய; கொடுமையாவது துன்புற்ருர்க்கு நெஞ்சம் இரங்காத வன்கண்மை. படுக - செத்து ஒழிவேனகுக. 'தில், அம்ம்' அசைகள். செவ்வன் அறிவு - செவ்வையாக இருத்தற்கு உரியதான அறிவு; அதுதான் கரிதோ என்றது, அதுதான் செவ்வையினின்று மாறுபட்டதல்ை. அறன் . நீதி; இது நொந்தார்க்கு இயன்றதை உதவும் பண்பு. உற. பொருந்த. கிடக்கை - வீட்டைச் சூழ அமைந்து கிடப்பது; இது முள் மரத்தால் அமைந்த வேலி. தாறு-குலே, நாற்றம் - மணம்; பசலை நிறத்தால் பீர்க்கம் பூவை ஒத்திருப்பினும், மணம் இல்லாததல்ை அதன் பால் மொய்த்தால் தேன் கிடையாது என அறிந்து தும்பி ஒதுங்கிற்றென்க. நெஞ்சு நெகிழ் செய்தல் - நெஞ்சம் நெகிழுமாறு தலையளி செய்தல். வெம் மலை - கோடையின் கடுமையால் வெம்மைப்பட்ட மலை. இறந்தோர் - கடந்தோர். விளக்கம்: நின்பால் உரைத்தும் பயனில்லை என்பாள் நின்னிடம் உரைத்ததன் பயனே இவ்வாறு யான் மேலும் துயருற்றது என்று நோகின்றன்ஸ் நெஞ்சம் கரியார்க்கு ஒன்றை உரைப்பின் அதுதான் மாருன பயனைத் தரு மென்பது உலக வழக்கு. அதனை நினைந்து, இவ்வாறு கூறினளும் ஆம். "தாறு’ என்றது பீர்க்கின் காய்க் குலைகளே. 'ஒடி நெஞ்சு நெகிழ் செய்தல்' என்றது, அப் பெட்டையைப் பின்னே தொடர்ந்து பறந்து சென்று, அதன் ஊடலைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/169&oldid=774166" இலிருந்து மீள்விக்கப்பட்டது