பக்கம்:நற்றிணை-2.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 நற்றிணை தெளிவுரை வேம்பின் ஒண்பழம் முணைஇ இருப்பைத் தேம்பால் செற்ற தீம்பழன் நசைஇ, வைகுபனி யுழந்த வாவல் சினதொறும் கெய்தோய் திரியில் தண்சிதர் உறைப்ப காட்சுரம் உழந்த வாட்கேழ் ஏற்றையொடு 5 பொருத யானைப் புண்தாள் ஏய்ப்புப் பசிப்பிடி உதைத்த ஒமைச் செவ்வரை வெயில்காய் அமையத்து இமைக்கும் அத்தத்து அதருழந்து அசையின கொல்லோ ததரல்வாய்ச் சிலம்பு கpஇய செல்வம் 10 பிறருணக் கழிந்தஎன் ஆயிழை அடியே ! தெளிவுரை வேம்பினது ஒளியையுடைய பழத்தைத் தின்னுதலையும் வெறுத்தது; இருப்பையின் இனிய பால் வற்றிய சுவையான பழத்தையும் தின்ன விரும்பியது; அதனலே, வைகிய பனியிலேயும் சென்று வருந்தியது, வெளவால். அவ்வாறு நாடிச் சென்ற அதன்மேல், மரக் கிளைகள் தோறுமிருந்து வீழ்ந்த பனித்துளிகள், நெய் .ே தாய் த் த திரியினின்றும் வீழும் சுடரைப் போலத் தண்ணிய துளிகளாக வீழ்ந்தபடியே இருக்கும். அத்தகு விடியற்காலையிலேயே சுரத்திடையே சென்று வருந்தியவள் அவள்! வாள்போலும் கோட்டையுடைய புலியேற்றை யோடு யானையும் போரிட்டது; அதனல் யானையின் கால்கள் பெரிதும் புண்பட்டன. புண்பட்ட அவ் யானையது தாள் போலச் சிதையுமாறு, பசிமிகுந்த பிடியானையானது ஒமையின் அடிமரத்தை உதைத்துச் சிதைத்தது. சிதைந்த ஒமையின் சிவந்த அந்த அடிமரமானது, வெயில் எழுந்து காய்கின்ற பொழுது விட்டுவிட்டு ஒளிசெய்தபடியே யிருக்கும். அத் தன்மையுடைய பாலையின் அருஞ்சுரமாகிய வழியிலே - o தலைவனை அவள் மணமுடிக்கும் காலத்துக் கழிக்க வேண்டிய, சிலம்பைக் குறித்த சிலம்புகழி விழாவின் சிறப்பினை யானும் கண்டு மகிழாதே, பிறர்கண்டு மகிழுமாறு அவன் பின்னகப் போயினுள் அவள் ! அழகிய கலனணிந்த என் அந்த மகளின் அடிகள்தாம் அச்சுரத்திடையே சென்று இதுகாலை எவ்வாறு வருந்துகின்றனவோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/172&oldid=774170" இலிருந்து மீள்விக்கப்பட்டது