பக்கம்:நற்றிணை-2.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை - 373 தெளிவுரை: தோழி! மாசற்ற மரத்திலே அமர்ந்தபடியே மக்களிடும் பலியை உண்ணும் காக்கையானது, காற்று மோதுகின்ற நெடிய கிளையிலே தன் மேல் வீழ்கின்ற மழைத்துளியுடனேயே அசைந்துகொண்டு, பலிக்குக் காத் திருக்கும், வெல்லுகின்ற போர்வலிமையுடைய சோழரது கழாஅர்" என்னும் பதியிலே கொள்ளப்படுகின்ற, நல்ல பல்வகையான மிகுந்த பலிக்கொடையோடும் சொரியப்படு கின்ற, சொல்லில்ட்ங்காத ச்ோற்றுத் திரளைகளுடன்ே அழகிய பலவான ஊனும் கலந்து இடப்படுகின்ற பெருஞ் சோற்றைத் தான் நினைத்தபடியேயும் அது இருக்கும். மழை பொருந்திய பெய்தலைக் கொண்ட மயக்கத்தையுடைய இருளின் நடுயாமத்திலே, அவர்தாம் நம் அருகேயிருந்தா ராகவும், நாம் நமக்கு உண்டாகிய மெய்க்குளிரின் கடுமை யாலே மிகப்பெரிதும் வருந்தினமாய்த் தூங்காதிருந்தனம்! அதனை அறிந்தும், நமக்குத் தலையளி செய்து நம்மைக் காக் காதவரான நம் காதலர்தான் நம்பால் அன்பே யில்லாதவர் காண்! அதனல், யானும் அவர் பிரிவுக்குச் சற்றும் வருந்து சொற்பொருள்: மாசு-குற்றம்; பலியுண்ணும் காக்கை குற்றமற்ற மரத்திலேயே இருக்கும் என்பது மரபு. மழையாற் கழுவப்பெற்று மாசு தீர்ந்த மரமும் ஆகும், பலியுண் காக்கை-மக்கள் தெய்வங்களைக் குறித்து இடும் பலிச் சோற்றை யுண்ணும் காக்கை. களியொடு-களிப்போடு. தூங்கி-அசைந்தாடியபடி, கழாஅர்". சோழர் க் கு ரி ய கடற்றுறைப் பட்டினம். சொன்றி-சோறு; சோற்றுத் திரளை. விடக்கு-ஊன். மால் இருள்-மயக்கத்தையுட்ைய இருள். உழையர்-அருகிருப்பவர். பனி-குளிர். அழுங்கி. வருத்தமுற்று, நலிந்து. - விளக்கம்: மழையில் நனைந்து மரக்கிளையில் அசைக்கும் காற்றேடு தானும் ஆடியடியே இருக்கும் காக்கையானது, கழாஅர் நகரிற் கொள்ளும், பெரும்பலியை நினைத்தபடி இருக்கும் என்றனர். இதல்ை, தெய்வங்களுக்கு நிணச் சோற்றுத் திரளைகளைப் பலியாக இடும் மரபும், அதனைக் காக்கை உண்ணத் தெய்வம் ஏற்றதாகக் கருதும் நம்பிக் கையும் பண்டைநாளில் இருந்தனவென்பது அறியப்படும். அருகிருந்த காலத்திலேயே நம் துயரைக் களையாத அவர் பிரிவை நினைத்து யானும் நெஞ்சழிவதிலேன் என்னும் |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/177&oldid=774175" இலிருந்து மீள்விக்கப்பட்டது